2 கேஸ் சிலிண்டர் வச்சிருக்கீங்களா.. எல்பிஜியை விட கம்மி காசு.. தூக்கி சாப்பிட வரும் எத்தனால் அடுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போகிறதே என்று கவலைப்படும் சாமானிய மக்களுக்கு ஒரு சூப்பரான ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது.. வழக்கமான எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக எத்தனால் மற்றும் தண்ணீர்க் கலவையில் இயங்கும் ஒரு புதிய வகை ஸ்டவ் தொழில்நுட்பத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.. இதன் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மித்ரோன் கே பீச் (Mintron Ke Bich) என்ற நிகழ்ச்சியில் இந்த புதிய தொழில்நுட்பம் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த நிகழ்ச்சியை ராஷ்ட்ரபாஷா பரிவார் என்கிற அமைப்பு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

Ethanol Stove

அங்கு பேசிய அமைச்சர் கட்கரி, இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியான மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை விட மிக மலிவானது மட்டுமல்லாமல், புகையில்லா சமையலுக்கும் வழிவகுக்கும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்..

2 கேஸ் சிலிண்டர்

பொதுவாகவே பல வீடுகளில் அவசரத் தேவைக்காக இரண்டு கேஸ் சிலிண்டர்களை வாங்கி அடுக்கி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.. ஆனால், அந்த இரண்டு சிலிண்டர்கள் இருந்தாலும் கூட, இந்த எத்தனால் அடுப்பு தரும் மிகக் குறைந்த எரிபொருள் செலவும், பாதுகாப்பான செயல்பாடும் கிடைக்காது என்பதே உண்மை.. கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என்ற கவலையே இல்லாமல், பாதியளவு செலவில் சமையல் செய்ய இந்த புதிய தொழில்நுட்பம் வழிவகுக்கிறது..

எல்பிஜி கேஸ் சிலிண்டர்

இந்த ஸ்டவ் டெக்னாலஜி ரொம்பவே சிம்பிள்.. வெறும் 7 சதவீத எத்தனாலுடன் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மிக்ஸ் செய்யும் போது, சமையலுக்குத் தேவையான தகுந்த நெருப்பு ஜுவாலை மிகக் குறைந்த செலவில் உருவாகிறது.. இது முற்றிலும் நமது இந்திய விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட ஒரு சுதேசி தொழில்நுட்பம் ஆகும்.

அதனால் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு ஒரு சூப்பரான மாற்று ஏற்பாடாக இது அமையும்.. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் சுமார் 87 சதவீதத்தை இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது.

இதற்காக ஆண்டுதோறும் சுமார் 22 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை ஏற்படுகிறது.. இந்த இறக்குமதி சுமையைக் குறைக்கவும், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கவும் பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது..

எத்தனால் + தண்ணீர் போதுமே

கடந்த 2014ம் ஆண்டில் வெறும் 1.53 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு, தற்போது 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.. இந்த சூழலில் தான் வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு வந்த எத்தனால் தொழில்நுட்பம், இப்போது முதன்முறையாக சமையலறைக்குள் நுழையப் பார்க்கிறது.

எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் அடிப்படையிலான உயிரி எரிபொருள் ஆகும்.. பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது எத்தனால் மிகவும் சுத்தமாக எரியக்கூடியது.

புதிய சந்தை வாய்ப்புகள்

கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுகளையும் இது மிகக் குறைவாகவே வெளியிடுகிறது.. இதன் காரணமாக, மண்ணெண்ணெய் அல்லது விறகு அடுப்புகளால் ஏற்படும் வீட்டு மாசைக் குறைக்கவும், கரும்பு மற்றும் சோள விவசாயிகளுக்கு நல்ல லாபம் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்..

இந்த மாற்று எரிசக்தி அறிவிப்போடு சேர்த்து, நாட்டின் எதிர்காலத் தூண்களான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனையையும், புதிய கண்டுபிடுகளுக்கான ஆர்வத்தையும் தூண்டும் வகையில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய அறிவியல் ஊக்குவிப்புத் திட்டத்தையும் அமைச்சர் நிதின் கட்கரி இதே மேடையில் தொடங்கி வைத்துள்ளார்.. தொழில்நுட்ப வளர்ச்சியே நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்பதால் இந்த முதலீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்..

சவால்கள், சிக்கல்கள்

ஆனால், இந்த ஐடியா எல்லாம் சூப்பராக இருந்தாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் சில பெரிய சவால்களும் முட்டுக்கட்டைகளும் உள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் இந்த புதுமையான அடுப்புத் தொழில்நுட்பம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்றால், அதற்குத் தேவையான எத்தனால் எரிபொருள் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்.. அதோடு மட்டுமில்லாமல், சமையலறைப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு வழிமுறைகள், இந்த சிறப்பு அடுப்புகளின் சந்தை விலை மற்றும் நாடு தழுவிய கட்டமைப்பு வசதிகள் போன்ற பல முக்கிய காரணிகள் சாதகமாக அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது..

காரணம், இந்தியா முழுவதும் இப்போதுள்ள சூழலில் அரசு மானியங்கள் மற்றும் அசுரத்தனமான விநியோக நெட்வொர்க்குகளின் துணையோடு எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு என்பது அசைக்க முடியாத ஒரு அஸ்திவாரத்தை அமைத்துள்ளது.

மத்திய அரசு தீவிரம்

இத்தனை காலமாக மக்கள் பழகிப்போன ஒரு வலுவான கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி, இந்த புதிய மாற்றுத் தொழில்நுட்பத்தின் மீது சாமானிய நுகர்வோருக்கு முழுமையான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல..

அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள் என்று ஏகப்பட்ட மாற்று எரிசக்தித் திட்டங்களை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.. இத்தனை திட்டங்களுக்கு நடுவே, புதிதாகக் களம் இறக்கப்பட்டுள்ள இந்த எத்தனால் சமையல் அடுப்புத் திட்டம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+