பிரிந்த சகோதரர்களை சேர்த்த நல அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நில அதிர்ச்சியால் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த அண்ணனும்,தம்பியும் ஒன்றாக இணைந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.இதனால் சென்னை நகர மக்கள் பீதியடைந்தனர்.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்ச்சி தாக்கியது என்ற தகவலையடுத்து தங்களது உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோருக்கு போன் செய்து நலம் விசாரித்தனர்.

அதுபோலவே, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒருவர் தனது அண்ணனுக்குப் போன் செய்து விசாரித்தார். அவரதுபோனால் அண்ணன் மனம் குளிர்ந்தது.

நில அதிர்ச்சி கொடுத்த பயம் நீங்கி தம்பி போன் செய்தது அவருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம்,கடந்த பல ஆண்டுகளாகவே இருவரும் மனப் பூசல் காரணமாக பேசிக் கொள்வதில்லையாம்.

சண்டை போட்டுப் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட நில அதிர்ச்சியால் அண்ணன் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தால் போன் செய்து நலம் விசாரித்துள்ளார் தம்பி.

நில அதிர்ச்சியால் சகோதரர்கள் சமரசமானது அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற