சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தமிழகத்தின் பெருமை மிக்க பதவிகளுள் ஒன்று என்பதால் முக்கிய அரசியல் கட்சிகள் எப்போதுமேபதவியைக் கைப்பற்ற முயற்சிக்கும். இப்போதைய மேயர் மு.க.ஸ்டாலின் வெறும் மேயராக மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின்புதல்வராகவும் இருக்கிறார்.

நீண்ட யோசனைக்குப் பின் மீண்டும் அவரையே மேயர் பதவிக்கு நிறுத்தியிருக்கிறது திமுக.

ஸ்டாலின் பதவிக்காலத்தில் சென்னை மாநகராட்சி புத்துயிர் பெற்றது என்று பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேச்சு உள்ளது. சென்னை மாநகரைபொலிவுள்ளதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானாலும் கூட சென்னை நகரில் கட்டப்பட்ட சிறு சிறு பாலங்கள் பொதுமக்களுக்கு பெருமளவில்உபயோகமாக உள்ளதை அனுபவப்பூர்வமாக பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

சாலை விளக்குகள், நல்ல சாலைகள் என தனக்கு கிடைத்த வாய்ப்பை ஸ்டாலின் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆயினும் அவருக்கு எதிராகசில விஷயங்களும் உள்ளன.

விஷன்-2000 என்ற பெயரில் ஸ்டாலின் செயல்படுத்திய பல திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது என முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுகவும், தமிழ் மாநிலகாங்கிரசும் பெரிய அளவில், மாநகராட்சிக் கூட்டங்களில் பிரச்சினையைக் கிளப்பின. மாநகராட்சிக் கூட்டங்களில் திமுகவுக்கு கடும் நெருக்கடியைக்கொடுத்தன.

சிறு பாலங்கள் அமைத்ததில் பெருமளவில் ஊழல், சாலைகள் போடுவது, நகரத் தூய்மைக்காக வெளிநாட்டு நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ததில் ஊழல் எனபல ஊழல்களை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இருப்பினும் இவற்றிற்கு எதிராக எந்த ஆதாரத்தையும் எதிர்க்கட்சிகள்இதுவரைநிரூபிக்கவில்லை. பால ஊழல் தொடர்பாகத்தான் கருணாநிதி கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

துவக்கத்தில் திமுகவுடன் தோழமையாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. தற்போது நடைபெறவுள்ளதேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியில் இறங்கியுள்ளன. அதிமுக சார்பில் பாலகங்கா மேயர் தேர்தலுக்கான வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

பாலகங்காவைப் பொறுத்தவரை பெரிய அளவில் கெட்ட பெயர் எதுவும் இல்லை. அவரை வேட்பாளராக அதிமுகவினர் பெரும்பாலானோர்எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் அதிமுகவுக்கு எந்தளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றுதெரியவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகமே ஜெயலலிதா அலையில் அதிமுக பக்கம் சாய்ந்தபோது, சென்னை மட்டும் விதிவிலக்காக முழுக்க முழுக்க திமுகபக்கம் வாக்களித்தது. இந்த முறையும் அது அப்படியே இருக்க வாய்ப்பும் அதிகமாக உள்ளது. கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோது, சென்னைமுழுவதும் ஜெயலலிதா எதிர்ப்புக் குரல் அதிகமாக கேட்டது. யாரைப் பார்த்தாலும் ஜெயலலிதாவை விமர்சித்தே பேசினர்.

சென்னைக்கு மு.க.ஸ்டாலினின் ஐந்தாண்டு கால பதவிக்காலத்தின்போது செய்யப்பட்ட பல நல்ல திட்டங்கள் மக்களால் இன்னும் பேசப்படுகிறது. மேலும்கருணாநிதி கைதால் சென்னை மக்களிடையே ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின்கூட்டணி ஆகிய பலத்தால் இப்போதைக்கு திமுகவின் கையே ஓங்கி நிற்கிறது.

ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க திமுகதான் காரணம் என்று அதிமுக தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது சென்னையில் எடுபடாது என்றுகூறப்படுகிறது. போலீஸ் உளவுப் பிரிவு தகவல்களும், திமுகவுக்கு சாதகமாகவே உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை திமுகதான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அதிமுகவுக்கு அதிக அளவில் வாய்ப்பு இருக்காதுஎன்றும் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவாக நிலைமை மாறலாம்.

இல்லாவிட்டால் ஸ்டாலின் தான் மீண்டும் மேயர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற