சென்னையில் தொடரும் போலி டாக்டர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தொடர்ந்து போலி டாக்டர்கள் போலீஸ் பிடியில் சிக்கியவண்ணம் உள்ளனர்.

சென்னை நகரில் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து போலி டாக்டர்களை போலீஸார் களையெடுக்கத் துவங்கினர்.

இதில் வரிசையாக போலி டாக்டர்கள் கைதான வண்ணம் இருந்தனர். கைதான போலிகளில் சிலர் பிற போலிடாக்டர்களை பற்றி தகவல் தெரிவித்தனர். அதன்படி ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பெண் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர்.லட்சுமி கிளினிக் என்ற பெயரில் போலி கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

இவர்கள் குறித்துத் தகவல் அறிந்த போலீஸ் குழு அங்கு சென்றது. அங்கு இருந்த ஜெயா மற்றும் சியாம்லால் ஆகியஇரு டாக்டர்களிடம் விசாரித்தனர். அவர்களுடைய சான்றிதழ்களைக் கேட்டபோது இருவரும் தாங்கள் போலிடாக்டர்கள்தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், பல டாக்டர்களிடம்கம்பவுண்டராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து டாக்டர்களாக தங்களை மேம்படுத்திக் கொண்டதையும்தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்கள் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற