தமாகா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் சனிக்கிழமை கும்பகோணத்தில்வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமாகாவுக்கு அதிமுக அணியில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வேட்பாளர் தேர்வில்அக்கட்சி தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில், மூப்பனார் மறைந்து 30 நாட்கள் ஆவதையொட்டி அதற்கான சடங்குகள் கும்பகோணத்தில்வெள்ளிக்கிழமை நடந்தன.

இதில் மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் கலந்து காண்டார்.

இந்த சமயத்தில் கும்பகோணத்தில் வைத்தே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வாசன் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. அனேகமாக சனிக்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற