அதிமுக மேயர் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை மாநகர மேயர் தேர்லில் அதிமுக சார்பில் போட்டியிடும் மலரவன் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல்செய்தார்.

அதிமுக வரும் உள்ளாட்சித் தேர்தலில் 5 மாநகராட்சிகளில் போட்டியிடுகிறது. அவற்றில் கோவையும் ஒன்று.

வெள்ளிக்கிழமை கோவை மாநகர மேயர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மலரவன், அதிமுகதொண்டர்களோடு சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதேபோல, சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரும் வேட்பு மனுத்தாக்கல்செய்தார். அவருடன் அதிமுக எம்.பி. சரோஜா உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற