சென்னை, மதுரை, கோவையில் 10 இஸ்லாமிய மாணவ இயக்கத்தினர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த 4 பேர்சென்னையிலும், 3 பேர் மதுரையிலும், 3 பேர் கோவையிலும நேற்று (வியாழக்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சிமி அலுவலகங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

சிமி தலைவர் ஷாகித்பாதூர் உள்ளிட்ட சிமியின் நிர்வாகிகள் 4 பேரையும் டெல்லிபோலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன்தொடர்பு வைத்திருந்ததான குற்றச்சாட்டின் பேரிலும், தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டிவிடும் விதமாக நடந்துகொண்டதாலும் சிமி அமைப்பு நேற்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மதுரையில் இருந்த சிமியைச் சேர்ந்த 3 பேரை மதுரையில்போலீசார் கைது செய்தனர். மதுரையில் செயல்பட்டு வந்த சிமி அலுவலகத்தை சோதனை செய்த போலீசார் அங்குஇருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான சிமி இயக்கம் சம்பந்தமான புத்தகங்களும்கைப்பற்றப்பட்டன.

மேலும், சென்னையில் 4 பேரும் கோவையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். சிமி அலுவலகத்திலிருந்து மதசம்பந்தமான புத்தகங்களும், ஆவணங்களும், கேசட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் சிமியின் தலைவர் ஷாகித் பாதூர் உள்ளிட்ட சிமியின் நிர்வாகிகள் 4 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர்.

இவர்கள் தொடர்ந்து பொதுக்கூட்டங்களை கூட்டி வன்முறையை தூண்டும் விதமாக பேசி வந்தனர். அவ்வாறுபேசக்கூடாது என்று பல முறை எச்சரித்த பின்னும் அவர்கள் தொடர்து அதே போல் பேசிவந்ததால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஒகாலாவைச் சேர்ந்த முனிசிபல் கவுன்சிலர் அசிப் முகமது கான் மத கலவரத்தை தூண்டும் விதமாகசெயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வ தேச தீவிரவாதி ஒசமா பின் லேடனுக்கு ஆதராவாக சுவரொட்டிகளை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. இந்த சுவரொட்டிகளில் மதக் கலவரத்தை தூண்டும் விதமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

சிமி தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. மக்கள் போலீசாருக்குஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை கழகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைதியேநிவவி வருகிறது என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் மதக்கலவரம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வட கிழக்கு டெல்லி உள்ளிட்டபல இடங்களில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் ஏராளமானவர்கள் தொழுகையில் ஈடுபடுவார்கள். அப்போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் போலீசார் காவலை பலப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிமி இயக்கக்தின் மாநில தலைவர் இர்ஷாட் கான் உள்ளிட்ட 22 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, பழைய லக்னோவில் கலவரம்வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போதுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற