உள்ளாட்சித் தேர்தல்: அதிருப்தியில் த.மா.கா. தொண்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தமிழ் மாநில காங்கிசுக்கு முறையான இடஒதுக்கீடு இல்லைஎன்று த.மா.கா. தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதிமுக கூட்டணியில் த.மா.கா. வுக்கு 25 சதவீத இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 13 சதவீத இடங்கள் தான்த.மா.கா. விரும்பிக் கேட்ட இடங்களாகும். மீதமுள்ள 12 சதவீத இடங்களில் திமுகவுக்குத்தான் வெற்றி வாய்ப்புஅதிகம் என்று கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

மேலும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், ஏற்கனவே வென்ற இடங்களும், வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளஇடங்களும் த.மா.காவுக்கு ஒதுக்கப்படவில்லை என்று அதிருப்தி நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் சென்னையின் பல்வேறு வார்டு உறுப்பினர்களும் தொண்டர்களுடன்இணைந்து சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தலைவர் வாசனைச் சந்தித்து அதிருப்தி தெரிவித்தனர்.

கன்னியாகுமரியில் நாகர்கோயில் நகராட்சி காங்கிரசின் கோட்டை. ஆனால் பல தேர்தல்களாக அந்த நகராட்சிநமக்கு வழங்கப்படவில்லை. இந்த முறையாவது கிடைக்கச் செய்யவேண்டும் என்று வாசனிடம் முறையிட்டார்கள்.

இதேபோல சென்னையில் பல வார்டுகளில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், இந்தமுறை தங்களுக்குகிடைக்கவில்லை, அவற்றை அதிமுக எடுத்துக்கொண்டது என்று புலம்பினார்கள்.

இவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட வாசன், "த.மா.கா. வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின்வேட்பாளர்களும் வெற்றி பெற பாடுபடுங்கள். மனதில்எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம், எல்லாம்நல்லபடியாக நடக்கும்" என்று தொண்டர்களிடம் ஆறுதல் கூறினார்.

இருப்பினும் சிலர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேலை செய்ய முடிவுசெய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற