சென்னை, மதுரை, திருச்சி மேயர் பதவிகளுக்-கு போட்டியிடுகிறது காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சென்னை, மதுரை மற்றும் திருச்சி மேயர் பதவிகளுக்குபோட்டியிடுகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுகதலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் காங்கிரஸ் தலைமையில் 10 கட்சிகளை கொண்ட3வது அணியும் தேர்தல் களத்தில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உள்ளாட்சி தேர்தலில் கூட்-ட-ணி கட்-சி-க--ளு-டன் இட ஒதுக்கீடில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ்சென்னை, மதுரை .திருச்சி மேயர் பதவிக-ளுக்-கு போட்டியிடுகிறது. இது தவிர 60 நகராட்சிகளிலும், 350பேரூராட்சிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

சென்னை மேயர்பதவிக்கு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார்போட்டியிடுகிறார். திருச்சி மேயர் பதவிக்கு எமிலி ரிச்சர்-டு போட்டியிடுகிறார். மதுரை மேயர் பதவிக்குபோட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

கோவை மேயர் பதவிக்கு மக்கள் தமிழ் தேசம் வேட்பாளர் அழகு ஜெயபால் போட்டியிடுகிறார். சேலம்மேயர்பதவிக்கு புதிய நீதி கட்சி வேட்பாளர் காசிவிஸ்வநாதன் போட்டியிடுகிறார். திருநெல்வேலி மேயர் பதவிக்குபுதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை, மக்கள்தமிழ் தேசம்,புதிய நீதிக்கட்சிஆகிய கட்சிகள் காங்கிரஸ் சின்னமான கை சின்னத்தில் போட்டியிடும்.

எங்கள் கூட்டணியில் சேருமாறு விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள்விரும்பினால் சேர்த்துக் கொள்வோம். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்என்றார்.

இன்றுடன் (திங்கள்கிழமை) வேட்பாளார் மனு தாக்கல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற