சிவாஜி பிறந்த நாள் .. நடிகர் தினமாக அனுசரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப்போவதில்லை என்று நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி அவரதுபிறந்தநாளான திங்கள்கிழமை எந்தவித கொண்டாட்டத்திற்கும் நடிகர் சங்கம் ஏற்பாடுசெய்யவில்லை.

சிவாஜி கணேசன் மறைவையொட்டி இந்த முடிவை நடிகர் சங்கம் எடுத்திருந்தது.நடிகர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன் தலைமையில் நடந்த நடிகர் சங்ககூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் செயலாளர் சரத்குமார்,துணைத் தலைவர் நெப்போலியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 1ம் தேதி சிவாஜியின் பிறந்தநாளாகும். வழக்கமாக குடும்பத்துடன்அமைதியான முறையில் தனது பிறந்த நாளை சிவாஜி கொண்டாடுவார். ஆனால் அவர்இறந்ததையடுத்து நடிகர் சங்கம் அவரது பிறந்த நாளை நடிகர் தினமாக கொண்டாடமுடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அவரது இறப்பையொட்டி அது அடுத்து ஆண்டுமுதல் விமரிசையாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவாஜியின் திரையுலக சேவையை முன்னிட்டு அவரது தபால் தலையைமத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் சென்னையில்திங்கள்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார். முதல் தபால்தலையை அவர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சிக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற