காஷ்மீர் சட்டசபை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தான் காரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தாக்குதல்நடத்திய 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

டாடா சுமோவில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு சட்டசபையில் வளாகத்தில் தீவிரவாதிகள் மோதினர். இதில் 31 பொது மக்களும்,ராணுவத்தினரும் இறந்தனர்.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியவெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெயிஷ்-ஏ-முகம்மத் என்ற தீவிரவாதஅமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த அமைப்பைச் செர்ந்த வஜாஹத் உசேன் என்பவன் தான் காரில் குண்டு நிரப்பிக் கொண்டு வந்து மோதினான்.

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளே இல்லை என அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறுகிறார். ஆனால், அதே நேரத்தில் அந்நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-முகாகிதீன் தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை மூடும்படி அடுத்த நாள் உத்தரவிடுகிறார். இப்படிஇரட்டை நாடகம் ஆடுவதே பாகிஸ்தானுக்கு வழக்கமாகிவிட்டது.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் தான் வளர்க்கிறது, ஊக்குவிக்கிறது, தீவிரவாதிகளுக்கு உதவுகிறது.

இவ்வாறு இந்தியா கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற