ஆளுனரை ஏன் சந்தித்தார் பன்னீர்செல்வம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாகவே தல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுனர் ரங்கராஜனை சந்தித்துப்பேசியதாகக் கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆளுனர் ரங்கராஜனை, ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை சந்தித்துப்பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இதுவழக்கமான, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், முதல்வரின் திடீர் சந்திப்பிற்கு பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் உள்ள இரண்டுஅமைச்சர்களை மாற்றுவது மற்றும் சிலருடைய இலாகாக்களை மாற்றுவது தொடர்பாக ஆளுனரை, முதல்வர் சந்தித்துப்பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.மாற்றம் செய்யப்படும் அமைச்சர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.

இந்த மாற்றத்தில் ஒரு பெண் அமைச்சரும் பதவி இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அந்த பெண் அமைச்சர் மீது ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோதே பல புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், ஜெயலலிதா அவரைக் கூப்பிட்டு கண்டித்து அனுப்பிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் மீது புகார்கள் வந்து கொண்டு இருப்பதால் அவரை மாற்றி விட ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற