அடுத்த ஆண்டு ஜூனுக்குள் வாகன நம்பர் பிளேட் நிறத்தை மாற்ற வேண்டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளின் நிறத்தை மாற்றுவதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜுன்மாதம்வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம்காண்பதற்காக எல்லா வாகனங்களிலும் உள்ள நம்பர் பிளேட்டுகளின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று மத்தியஅரசு முடிவு செய்தது.

இதற்காக உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிளேட்டுக்களில்வாகன பதிவு எண்களில் குரோமியம் கலந்த ஹாலோகிராம் செய்யப்பட்ட அசோக சக்கரம் இருக்கும். இந்த உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டுக்களை அரசே தயாரித்து வழங்கும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

மேலும் நம்பர் பிளேட்டுகளின் நிறமும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு மஞ்சள் நிற பின்னணியில் கறுப்பு எழுத்துக்களும், சொந்த உபயோகத்திற்கானவாகனங்களுக்கு வெள்ளை நிற பின்னணியில் கறுப்பு எழுத்துக்களும் இருக்குமாறு மாற்றம் செய்ய வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் பணி முடிவடையாத காரணத்தால் பாதுகாப்புநம்பர் பிளேட்டை பொருத்த மத்திய அரசு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் கொடுக்க முடிவுசெய்துள்ளது.

அதுவரை நம்பர் பிளேட்டுகளின் நிறம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டால் போதும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வர்த்தக ரீதியான வாகனங்களின் நம்பர் பிளேட்டின் நிறத்தை மாற்றியமைக்க அடுத்த ஆண்டுபிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களுக்கான நிறத்தை மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜுன் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு மக்களை சரிவர சென்றடையாத காரணத்தால் பொதுமக்கள் பலரும் தங்கள் வாகனத்தின்நம்பர் பிளேட்டின் நிறத்தை மாற்றும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் உத்தரவு குறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கருணா சாகர், வாகனங்களின் நம்பர்பிளேட்டுகளின் நிறங்களை மாற்ற போதுமக்கள் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, மத்திய அரசுஅடுத்த ஆண்டு வரை கால அவகாசம் கொடுத்துள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற