ஆசிரியர் தேர்வு: அரசுக்கு கி.வீரமணி கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்போது பணி மூப்பு (முதலில்பதிவு செய்தவர்கள்) மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடம் ஒதுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்துள்ளது தவறான முடிவாகும்.

இதனால் அரசுக்கு அவப் பெயரே கிடைக்கும். மேலும், ஊழல் நடக்கவும் வாய்ப்புஏற்படும்.

எனவே இந்த முடிவை கைவிட்டு விட்டு, பதிவு மூப்பு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில்ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்வர் மற்றும் கல்விஅமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற