அதிமுக போட்டி வேட்பாளர்களுக்கு ஜெ. கடும் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரபூர்வமாக போட்டியிடும்வேட்பாளர்களையும், தோழமை கட்சி வேட்பாளர்களையும் எதிர்த்து வேட்புமனுதாக்கல் செய்துள்ள அதிமுகவின் போட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைஉடனே வாபஸ் பெறவேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு வாபஸ் பெறாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஎச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.கழகத்தைச் சேர்ந்த பலரும் விண்ணப்பம்கொடுத்திருந்தனர். ஆனால் சீட் கேட்ட அனைவருக்கும் சீட் கொடுக்க இயலாது என்றநிலையை கழகத்தினர் உணரவேண்டும்.

அதிமுக சார்பில் அதிகாரபூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்தும்,தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் யாரேனும் வேட்பு மனு தாக்கல்செய்திருந்தால் அவர்கள் அதை உடனே வாபஸ் பெறவேண்டும்.

அவ்வாறு வேட்புமனுவை வாபஸ் பெறாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற