ஐரோப்பிய நாடுகளில் தாக்கப்படும் முஸ்லீம்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வியன்னா:

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறதுஎன்று ஐரோப்பிய யூனியன் இனவெறி ஆய்வு மையம் கூறுகிறது.

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள்அனைவரும் முஸ்லீம் மதத் தீவிரவாதிகள் என்று அமெரிக்கா ஆதாரம் வெளியிட்டுள்ளது.

அதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது கிருஸ்தவ மக்கள் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று ஐரோப்பிய இனவெறி, மற்றும் பிற மதத்தினர் மீதுள்ள வெறுப்பு பற்றி ஆராயும் மையம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின் தலைவர் பாப் பர்கிஸ் கூறுகையில்,

பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இனவெறி உணர்வு அதிகரித்துவருகிறது.

அமெரிக்கா மீத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த மதத்தினருக்கும் எந்த சம்பந்ததமும்இல்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பல நாடுகளில் முஸ்லீம் மக்கள் வார்த்தையால் அவமானத்தப்படுகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் கூடவாய்மொழியால் அவமானப் படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த மையத்தின் அமெரிக்க இயக்குநர் பீட் விங்க்லர் கூறுகையில்,

அமெரிக்காவில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது கடுமையானவிளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உள்ள திஹேக், லிசிங்கன் ஈகிய நகரங்களில் உள்ள மசூதிகளில்முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மேலும் டச்சு நகரமான நிஜ்மெகனில் ஒரு முஸ்லீம் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் உள்ள கோதன்பெர்க் நகரில் இரானைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் டாக்சி டிரைவர் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார்.

இதேபோல பிரிட்டனிலும் ஒரு முஸ்லீம் வேன் டிரைவர், கோரமாகத் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் ரோட்டில்கிடந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. அவர்கள் இன வெறிக்குஎதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இருப்பினும் சில நாடுகளில், சில அரசியல் கட்சிகள் இதுபோன்ற முஸ்லீம்எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவருவது வருந்தத்தக்கது என்றார்.

இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவல் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காஅரசாங்கரீதியாகவோ, தேசிய ரீதியாகவோ அரேபியர்களுக்கு (முஸ்லீம்களுக்கு) எதிரானதல்ல என்றுகூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற