For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை வாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் மோசடி: பலே தம்பதி தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

அரியலூர்:

அரியலூரில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்துதலை மறைவாகிவிட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் காலேஜ் ரோட்டில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில்தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் அசோக்குமார் (வயது 35). இவரதுமனைவி கீதா (வயது 21). கீதா அறக்கட்டளையின் பொது மேலளாராக இருந்துவந்தார்.

அசோக்குமார் 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக் கட்டிடத்தில் தான் அன்னை தெரசாஅறக்கட்டளையை தொடங்கினார்.

ஆனால், குறுகிய காலத்திலேயே அன்னை தெரசா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி,அன்னை தெரசா ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம், அன்னை தெரசா முதியோர்இல்லம், அன்னை தெரசா ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம், அன்னை தெரசாஎக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ், அன்னை தெரசா நர்சரி கார்டன் என்று பலவற்றைதொடங்கினார்.

இந்த அன்னை தெரசா அறக்கட்டளையில் 130க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.

அசோக்குமார் அடுத்தடுத்து தொடங்கிய தொண்டு நிறுவனங்கள் காரணமாகஅரியலூர் பகுதியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் இவர் தன் அறக்கட்டளையில் பணிபுரிந்து வருபவர்களிடம், வெளியில்அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் நல்ல வேலை வாங்கி தருவாதகூறி முன்பணமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை வசூலித்தார்.

அதே சமயம் அவர் அறக்கட்டளையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கு 2 மாத காலமாகசம்பளமும் தரவில்லை. ஊழியர்கள் போய் சம்பளம் கேட்ட போதும் அவர் சரிவரபதில் கூறமால் மழுப்பி விட்டார்.

வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய அவர் யாருக்கும் வேலையும் வாங்கிதரவில்லை. கேள்வி கேட்டவர்களுக்கு சரியான பதிலும் கூறவில்லை.

அறக்கட்டளை அலுலகத்திற்கான வாடகையும் கொடுக்கவில்லை. வேன், ஆட்டோஆகியவற்றுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் அசோக்குமார் கொடுக்கவில்லை.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் எக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ் பொருட்களைவிற்றுவிட்டு வருவதாக தன் மனைவி கீதாவுடன் புறப்பட்டு சென்றார் அசோக்குமார்.சென்றவர்கள் இருவரும் திரும்பி வரவேயில்லை.

அதே நேரத்தில் முதியோர் இல்ல காப்பாளர் மாணிக்கம் மற்றும் ராஜேந்திரன்ஆகியோரும் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பணம் கொடுத்து ஏமாந்த அறக்கட்டளை ஊழியர்கள்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊழியர்களில் சிலர் அலுவலகத்தை பூட்டிவிட்டுஅரியலூர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து அரியலூர் ஆர்.டி.ஓ. கணேசன், அரியலூர் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்மற்றும் பல அதிகாரிகள் சென்று அன்னை தெரசா அறக்கட்டளை அலுவலகத்தை பூட்டிசீல் வைத்தனர்.

அன்னை தெரசா அறக்கட்டளையில் பணிபுரிந்துவரும் செங்கமலம் என்பவர் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ 30 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்ட அசோக்குமார் தனக்குவேலை வாங்கிதரவில்லை என்று போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அசோக்குமார்,கீதா, மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர். அசோக்குமார் வேலைவாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அன்னை தெரசா மனநோய் குன்றியோர் காப்பகத்திலுள்ள 65 பேரும்,ஊனமுற்றோர் பள்ளியிலுள்ள 60 பேரும், முதியோர் இல்லத்திலுள்ள 3 பேரும் கடந்த 2நாட்களாக உணவு இல்லாமல் பட்டினியாக இருந்து வந்தனர்.

இவர்களுக்கு அங்குள்ள பிற தொண்டு நிறுவனத்தினர் உணவு பொட்டலம் வழங்கினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X