For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

22 போலீசார் சஸ்பெண்ட் - 56 போலீசார் டிரான்ஸ்பர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூர், அத்திப்பாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராயம்குடித்ததில் 32 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையில் 22 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெணட்) செய்யப்பட்டுள்னர். 56 போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயவிற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

கோட்டூர், அத்திப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஏராளமானவர்கள்சாரயத்தை வாங்கி குடித்தனர். இவர்களில் பல பெண்களும் அடங்குவர்.

சாராயத்தை குடித்த சில நிமிடங்களிலேயே பலரும் வாந்தி எடுத்து மயங்கிவிழுந்தனர்.

பலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும்,சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 11 பேர் இறந்து போனார்கள். மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றிஇறந்து போனார்கள். இன்னமும் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சாராயத்தை குடித்த பலரும் கண்பார்வை இழந்து துடித்து வருகிறார்கள். குடும்பத்த தலைவனை இழந்து வருந்தும்பெண்கள்,.தந்தையை இழந்த சிறு குழந்தைகள் என பலரும் கதறி அழும் காட்சி கல் நெஞ்சம் கொண்டவரையும்கரைக்கும் விதமாக உள்ளது.

இந்நிலையில் அரசு எடுத்த நடவடிக்கையில் 22 போலீசார் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளனர். 56 போலீசார்டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால்செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விஷ சாரய சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டேன். சாராயம் விற்பனை செய்த கஸ்தூரி, அவரது மகன்பார்த்திபன் இருவரையும் கைது செய்து விசாரணை செய்துவருகிறோம். அவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததன் மூலமும், சாராயம் குடித்தவர்களின் ரத்தத்தைபரிசோதனை செய்ததன் மூலமும் சாராயத்தில் மெத்தனால் என்ற விஷத்தன்மை கொண்ட திரவம் கலந்துள்ளதுதெரியவந்துள்ளது.

இந்த சாராய சாவு சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 42 பேரும், மாதவரம்மதுவிலக்கு அமலாகக்கப்பிரிவு போலீசார் 14 பேரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். 22 போலீசார் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்- இன்ஸ்பெக்டர்கள் திரவியம்,அற்ஜுனன், குமரன், சுப்ரமணிய ராஜு, ஒரு ஏட்டு, 6 கான்ஸ்டபிள்கள் மற்றும் செங்குன்றம் காவல் நிலையத்தைச்சேர்ந்த ஏட்டுகள் 8பேரும், 1 கான்ஸ்டபிள் உள்ளிட்ட 22 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார் டி.ஜி.பி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X