For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மந்தமாய் தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை துவங்கியது. சென்னை, கோவை, சேலம்,திருநெல்வேலி ஆகிய நான்கு மாநகராட்சிகள், 44 நகராட்சிகள், 307 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்களில்செவ்வாய்க்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.

வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு மந்த கதியில் துவங்கியது. இருப்பினும் போகப் போக வாக்குப்பதிவுவிறுப்பாக இருந்தது.

இந்த முதல் கட்ட வாக்குப்பதிவின்போது 2,60,75,941 பேர் வாக்களிக்கிறார்கள். காலையில் வாக்குப் பதிவு துவங்கியபோதுசென்னை உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை.

இருப்பினும் நேரம் போகப் போக வாக்குப் பதிவில் விறுவிறுப்பு கூடியது. பல வாக்குச் சாவடிகள் முன்பு அதிமுகவினர் அதிகஅளவில் காணப்பட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு போலீசாரிடம் திமுக மற்றும் பிற கட்சியினர் கூறியும் கூடஅதை போலீஸார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

பகல் 1 மணி வரை சென்னையில் 25 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தல் அதிகாரி பேட்டி:

வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையர் பி.எஸ்.பாண்டியன் கூறுகையில்,

முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 10.30 மணியளவில் வாக்குப் பதிவு சூடு பிடித்தது. சென்னைநகரிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எந்தப் பகுதியிலும் வன்முறையோ, முறைகேடோ நடந்ததாக எழுத்துப்பூர்வமாக புகார் ஏதும் வரவில்லை.(!)

இருப்பினும் கடலூர், சென்னை எழும்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்குச் சாவடிகளை ஆளுங்கட்சியினர்கைப்பற்றி கள்ள ஓட்டுப் போட்டதாக திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் தொலைபேசி மூலமாக புகார் செய்தனர்.ஆயினும் இவை உறுதிப்படுத்தப்படவில்லை.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படும் என்றார் அவர்.

சென்னையில் பல தலைவர்கள் வாக்குப் பதிவு செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநதி,முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர்சென்னையில் வாக்களித்தனர்.

மதுரையில்...:

மதுரையில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்து வருகிறது. அதேபோல, சேலத்திலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்துவருவதாக செய்திகள் வந்துள்ளன. 1 மணி வரை அங்கு 38 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 27 சதவீதம்வாக்குகள் பதிவாகியிருந்தது.

திருநெல்வேலியில் சாலைமறியல்:

திருநெல்வேலியில் குறுக்குதுறை என்ற இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி கலைத்தனர். பின்னர் அங்குதொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. திருநெல்வேலியில் 35 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

தூத்துக்குடியில் 33 சதவீத வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 35 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. காஞ்சிபுரத்தில் தறி வேலைபார்க்கும் ஆண்களும், பெண்களும் தங்களது வேலையை விட்டு விட்டு வாக்களிக்க வந்தது அங்கிருப்போரை கவர்ந்தது.

அதிகமாய் வந்த பெண்கள்:

வேலூரில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் வாக்குச் சாவடிகளுக்கு வந்திருந்தனர். இங்கு மழை பெய்து வருவதன்காரணமாக வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மதியம் 1 மணி வரை இங்கு 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

கன்னியாகுமரியில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இங்குள்ள விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முந்திரித்தோப்புகளில் பணியாற்றும் சுமார் 50,000 பெண்கள் வேலையை விட்டு விட்டு வாக்களித்தனர். புத்தளம் பகுதியில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வாட்டி வரும் குளிர்:

நீலகிரியில் கடும் குளிர் நிலவுவதால் காலை முலே ஓட்டுப் பதிவு வெகு மந்தமாக இருந்தது. பல வாக்குச் சாவடிகள்வெறிச்சோடிக் கிடந்தன. பிற்பகல் 1 மணி வரை இங்கு 12 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.வீரப்பன்:

வீரப்பன் நடமாட்டம் உள்ள காடுகளாக கருதப்படும் முதுமலை மற்றும் பல்வேறு காட்டுப் பகுதிகளில் சிறப்புப் போலீஸ் படை பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்ததால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வந்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X