For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை துணை மேயர் தேர்தலில் திமுக போட்டி ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள சில கவுன்சிலர்களின் உதவியுடன் சென்னை மாநகராட்சித் துணை மேயர்தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க திமுக சார்பில் ரகசிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் உள்ளன. இந்த நிலையில்துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் சங்கரவள்ளி என்ற பெண் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெஜாரிட்டி இல்லாத நிலையில் திமுக வேட்பாளரை நிறுத்தியது ஏன் என்ற ஆச்சரியக் கேள்வி தமிழக அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஆனால் திமுக தரப்பில் ரகசியத் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவினரின் போக்கால்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

6 மாநகராட்சிகளிலும் அதிமுகவுக்குநெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட அவர்கள்முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள திமுக தலைமை மாநகராட்சிதிமுகவினருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் தற்போது 15 தமாகா கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில்பெரும்பாலனவர்கள் அதிமுக குறித்து அதிருப்தியுடன் உள்ளனர்.

தங்களது கவுன்சிலர் வேட்பாளர்கள் பலரை அதிமுகவினர் மறைமுகமாக வேலை பார்த்து பல இடங்களில்தோற்கடித்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து அவ்வாறு அதிருப்தியுடன் உள்ள கவுன்சிலர்களைவளைத்துப் பிடித்து தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க திமுக முயற்சிகளைமேற்கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 தமாகா கவுன்சிலர்கள் வரை அவர்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.

மேலும், கராத்தே தியாகராஜன் வளருவதை தமாகாவினர் விரும்பவில்லை. ஒரு காலத்தில் தமாகாவில் இருந்தகராத்தே தியாகராஜன் அதிரடியாக செயல்படக் கூடியவர். ஆனால் அதிமுகவில் சேர்ந்த பின் அவர்தமாகாவினரைக் கண்டு கொள்வதேயில்லை என்ற வருத்தம் தமாகா தலைவர் வெற்றிவேலுக்கு உள்ளது.

இதனால் தமாகா கவுன்சிலர்கள் கராத்தேவுக்கு ஓட்டுப் போட விரும்பவில்லை என்று தெரிகிறது.

தமாகாவில் ஒரு பகுதியினரை இழுப்பதோடு, மதிமுக, காங்கிரஸ், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆகியோரையும்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க திமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை மனதில் வைத்தே துணைமேயர் தேர்தலில் வேட்பாளர் பெயரை திடீரென திமுக அறிவித்துள்ளது.

இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று திமுக தலைமை கருதுகிறது. மேலும், ஸ்டாலினுக்குப்போட்டியாக கராத்தே செயல்படுவதை தடுக்க எந்தவித முயற்சியிலும் இறங்கிக் கொள்ளலாம் என்று திமுககவுன்சிலர்களுக்கு திமுக தலைமை அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, சென்னை மாநகராட்சிக்கு நடக்கவுள்ள துணை மேயர் தேர்தலில் படு சுவாரசியமான காட்சிகள்புதன்கிழமை அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் விவரம்

மொத்தஇடங்கள் - 155

தேர்தல் நடந்தது - 154

அதிமுக அணி - 83

அதிமுக - 67

தமாகா - 15

இந்திய கம்யூனிஸ்ட் - 1

திமுக அணி - 64

திமுக - 60

பாஜக - 3

பாமக - 1

பிற கட்சிகள்

காங்கிரஸ் - 2

மதிமுக - 1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

சுயேச்சைகள் - 2

காலியிடம் - 1

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X