For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளால் ஆபத்து: தமிழக போலீசுக்கு அதிக நிதி உதவி தேவை - பன்னீர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக அரசுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து அதிகமாக இருப்பதால், மாநில போலீஸ் படையை வலுப்படுத்த மத்தியஅரசு நிதியுதவி செய்ய வண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

டெல்லியில் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த மாநாடு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தமாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்தை எடுத்துக் கூறினார்கள். தமிழகமுதல்வர் பன்னீர் செல்வம் தனது கருத்தைக் கூறுகையில்,

தமிழகத்தில் விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப்படை, மற்றும் மக்கள் போர்ப்படை ஆகிய தமிழ்தீவிரவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது.

இவர்கள் தவிர முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களாகிய அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி,ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், இந்திய முஸ்லீம் மாணவர் இயக்கம் போன்றஇயக்கங்களும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது "சிமி" இயக்கத்திற்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தமிழகத்தில் இருந்த அதன் 2 அலுவலகங்கள் பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக போலீசார் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதோடு, இது போன்ற தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதிலும்தனிக் கவனம் செலுத்தி வருவது பாராட்டத தக்கது. இருப்பினும் தமிழக போலீஸை வலுப்படுத்த வேண்டியஅவசியத்தை மத்திய அரசு உணர்ந்து, அதற்கு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்.

"பொடோ"வை ஆதரிக்கிறது தமிழகம்

மேலும் தடா சட்டம் தற்போது காலாவதியாகிவிட்டதால், அதற்கு இணையான கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும் என்ற கருத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக "பொடோ" சட்டத்தை தமிழக அரசுஆதரிக்கிறது.

இந்தச் சட்டத்தில் கூட தடா சட்டத்தில் உள்ளதை விட பல பிரிவுகள் கடுமை குறைந்தவையாக உள்ளன.தகவல்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற பிரிவு குறித்து பத்திரிக்கைகயாளர்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால்அவை சில நேரங்களில் தவறுதலாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

ஆனால் தீவிரவாதிகளால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமே என்பதை அனைவரும் உணரவேண்டும். "பொடோ" சட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் அந்தச் சட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியில்உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சமீபத்தில் தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழக தேசிய மீட்சிப் படை ஆகிய இரண்டுஅமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கள் மீது மத்திய அரசும் தடைவிதிக்க வேண்டும்என்று தமிழக அரசு விரும்புகிறது.

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X