For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் இந்தியக் குழு

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

முதல்கட்டமாக ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லம்பா தலைமையிலான அதிகாரிகள் குழுஇன்று ஆப்கானிஸ்தான் போய்ச் சேர்ந்தது. இத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் மருத்துவர்கள், நர்ஸ்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் காபூலில் தங்கியிருந்து நார்த்தர்ன்அலையன்ஸ் படையினருக்கு சிகிச்சை அளிப்பர்.

இக் குழுவில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக நார்தத்ர்ன் அலையன்ஸ் படையினருடன்ஆலோசனையில் ஈடுபடுவர்.

1996ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் ஆதரவுடன் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன்ஆப்கானிஸ்தானில் இருந்த தூதரகத்தை இந்தியா மூடியது. தலிபான்களின் ஆட்சியையும் இந்தியாஅங்கீகரிக்கவில்லை.

புர்ஹானுதீன் ரப்பானியைத் தான் ஜனாதிபதியாக இந்தியா அங்கீகரித்தது. அவரது அரசால் நியமிக்கப்பட்டகலீலியைத் தான் ஆப்கானிஸ்தானின் தூதராக இந்தியா ஏற்றுக் கொண்டது. தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோதுடெல்லி ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் ரப்பானியின் தூதர் தான் பதவியில் இருந்தார். அவருக்கு இந்தியா முழுஉதவிகளையும் செய்து வந்தது.

இந்திய விமானத்தை தலிபான்களும் பாகிஸ்தானும கடத்திய பிறகு ரப்பானி மூலமாக நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருக்கு முழு உதவிகளையும் இந்தியா தந்து வந்தது.

இப்போது ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி இந்திய ஆதரவாளர்களான நார்த்தர்ன் அலையன்சின் கட்டுப்பாட்டில்வந்துவிட்ட நிலையில், தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இன்று காலை 9.55 மணிக்கு இந்திய தூதுக் குழு காபூல் அருகே உள்ள பக்ராம் விமானத் தளத்தில் சிறப்புஹெலிகாப்டரில் சென்று இறங்கியது. முன்னதாக இந்தக் குழு விமானம் மூலம் தஜிகிஸ்தான் சென்று அங்கிருந்துஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாக். படைகளை கொன்று குவிக்க திட்டம்:

குண்டூஸ் நகரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான் ஆதரவு பாகிஸ்தான், அரேபிய தீவிரவாதிகளை கொன்றுகுவிக்க அமெரிக்காவும் நார்த்தர்ன் அலையன்சும் திட்டமிட்டுள்ளன.

தலிபான்களுடன் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள், செசன்யர்கள், அரேபியர்களும் இந்த நகரில் பதுங்கிஉள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் நகரம் மட்டும் தான் இப்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநகரை அப்துல் ரஷீத் தோஸ்தம் தலைமையிலான நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.கிட்டத்தட்ட 75 அமெரிக்க விமானங்கள் குண்டூஸ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில் தலிபான்களுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் பலியாகி வருவதாகக்கூறப்படுகிறது. இந்த பொது மக்கள் நகரைவிட்டு வெளியேற தலிபான்கள் அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில்நார்தத்ர்ன் அலையன்சின் பீரங்கிக் குண்டுகளும் அமெரிக்க விமானங்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன.

இருவருக்கும் இடையே சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை மட்டுமே உயிருடன் பிடிப்போம் எனவும், பாகிஸ்தான்,செசன்யா, அரேபியாவைச் சேர்ந்த தீவிரவாதிகளைக் கொன்று குவிப்போம் எனவும் நார்த்தர்ன் அலையன்ஸ்கூறிவிட்டது. இவர்களை சரணடையச் செய்து சிறை பிடிக்கவோ, அல்லது வேறு நாடுகளுக்கு நாடு கடத்தவோஅமெரிக்காவும் தயாராக இல்லை.

இந்தத் தீவிரவாதிகள் எங்கு சென்றாலும் பிரச்சனை வரும் என்பதால், அவர்களை கொன்றுவிடுவதே நல்லது எனஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.

பாக். எல்லையில் குவியும் அகதிகள்:

அதே போல நாட்டின் தென் பகுதியில் காண்டஹார் நகரமும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த நகர்மீது அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகபாகிஸ்தானுக்குள் நுழைய முயன்று வருகின்றனர்.

ஆனால், அவர்களை எல்லையிலயே பாகிஸ்தான் ராணுவம் தடுத்து நிறுத்தியால், அவர்கள் கல்லீச்சில் ஈடுபட்டனர்.இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் 1,00,000 அகதிகள்ஏற்கனவே குவிந்துள்ளனர். இவர்களுக்கு உணவோ, உதவியோ வந்து சேரவில்லை.

இதனால், இங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இடைக்கால அரசு:

இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் பெருகி வரும் நிர்வாகப் பிரச்சனைகளை சமாளிக்க உடனடியாக ஒருஇடைக்கால அரசை அமைக்க ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நார்த்தர்ன் அலையன்ஸ், புஷ்தூன் தலைவர்களுடன் ஐ.நா. பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X