கட்டண, விலை உயர்வுகளை எதிர்த்து திமுக கண்டனப் பொதுக் கூட்டம்
சென்னை:
தமிழக அரசின் மினி பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் 13ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக அரசு அறிவித்துள்ள மினி பட்ஜெட்டை எதிர்த்தும், அரசு செய்து வரும் தவறுகள் மற்றும் மக்கள் விரோதசெயல்களுக்கு கருணாநிதியின் ஆட்சியை குற்றம் சாட்டி வரும் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்களின்பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.
இந்த உண்மையை மக்களுக்கு விளக்கிக் கூற, வரும் 13ம் தேதி முதல் தொடர்ந்து தமிழகமெங்கும் கண்டனப்பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக கிளையினர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார் அன்பழகன்.
![]() ![]() ![]() |
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!