For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா தாக்குதல்: துபாய்- ஹவாலா- தாவூத்- தீவிரவாதிகள் தொடர்பு

By Staff
Google Oneindia Tamil News

கொல்காத்தா:

கொல்கத்தாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தியதீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் மாபெரும் ஷீ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான பார்த்தபிரதிம் ராய் பர்மன்என்பவரை சில மாதங்களுக்கு முன் கடத்திய ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பினர் 34 மில்லியன் டாலர்பணத்தை வாங்கிக் கொண்டு தான் அவரை விடுவித்துள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அந்ததொழிலபதிபர் கேட்டுக் கொண்டதால் இந்த விஷயத்தை போலீசாரும், மத்திய, மாநில அரசுகளும் வெளியில்சொல்லவில்லை.

ஆனால், கொல்கத்தா போலீசாரும் சி.பி.ஐயும் இந்தக் கடத்தல் குறித்து ரகசிய விசாரணை நடத்தின. இதில்ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பின் தலைவனான பர்கான் மாலிக் என்ற ஆப்தாப் அன்சாரி துபாயில்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனைப் பிடிக்க இன்டர்போலின் உதவியையும் இந்தியா நாடியது.

அன்சாரி தலைமையில் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பை உருவாக்கித் தந்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவுப் பிரிவு தான் என சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

மேலும் இந்த விசாரணையில் தொழிலதிபரை விடுவிக்க அவரது குடும்பம் வழங்கிய பணம் நியூயார்க்கில் தாக்குதல்நடத்திய முகம்மத் அட்டா தலைமையிலான கும்பலுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. நியூயார்க்உலக வர்த்தக மையத்தில் தாக்குதல் நடந்திய முகம்மத் அட்டாவின் வங்கிக் கணக்குக்கு துபாயில் இருந்து 100மில்லியன் டாலர் பணம் சென்ற விவரத்தை எப்.பி.ஐ. ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது.

இதில் 37.5 மில்லியன் டாலர் பணம் இந்தியத் தொழிலதிபரைக் கடத்தி பறிக்கப்பட்டது என்று சி.பி.ஐ. இப்போதுகண்டுபிடித்துள்ளது. கொல்கத்தா தாக்குதலை நடத்திய ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பினர் தான் இந்தப்பணத்தை அட்டாவுக்கு அனுப்பியுள்ளனர்.

தொழிலபதிபரைக் கடத்தியது குறித்து விசாரித்த கொல்கத்தா போலீசார் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பின்லோக்கல் தலைவனான் ஆசிப் ரசாக் என்பனைக் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த இவனுக்கு குஜராத்திலும்சில கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருந்ததால் குஜராத் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அங்கு அவர்தப்பியோட முயன்றபோது குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதையடுத்து இவனது நினைவாக ஆசிப் ரசாக் கமாண்டோ படை என்ற பிரிவை ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிஅமைப்பு உருவாக்கியுள்ளது. இதனால், கொல்கத்தா தாக்குதலுக்கு முதலில் பொறுப்பேற்றஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பும் பின்னர் பொறுப்பேற்ற ஆசிப் ரசாக் கமாண்டோ படையும் ஒரேஅமைப்பு தான் என்பது தெரியவந்துள்ளது.

கொல்கத்தா தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே இந்த விவரங்களை சி.பி.ஐ. தெரிந்து கொண்டுவிட்டது.உடனடியாக இந்த விவரங்களை நேற்று இந்தியாவில் இருந்த எப்.பி.ஐ. தலைவர் முல்லரிடம் சி.பி.ஐ. இயக்குனர்சர்மா கொடுத்துவிட்டார்.

தொழிலதிபர் குடும்பத்திடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பங்கு இந்திய விமானக் கடத்தலையடுத்துவிடுவிக்கப்பட்ட ஒமர் சேக் என்பவன் மூலம் நியூயார்க்கில் தாக்குதல் நடத்திய முகம்மத் அட்டாவுக்குப் போய்ச்சேர்ந்துள்ளது. இந்த ஒமர் சேக் யோசனைப்படி தான் தொலதிபரை ஆப்தாப் அன்சாரி கடத்தியுள்ளான்.

ஒமர் சேக்குக்கும் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. இந்தஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்பின் லோக்கல் தலைமையகம் பங்களாதேஷில் இருப்பதும்தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X