தொழில் வளர்ச்சி சரிவு: வெள்ளை அறிக்கை கோருகிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருமளவு சரிவடைந்து விட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கைஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதல் 3 முக்கிய இடங்களை வகித்திருந்தது.

ஆனால் கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக தொழில் வளர்ச்சி பெரும் சரிவை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது அந்த 3 இடங்களையும் கர்நாடக அரசு பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு இந்த தொழில் வளர்ச்சி சரிவிற்குப் பொறுப்பேற்று வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய தொழில் அமைச்சராக உள்ள முரசொலி மாறன் உதவியுடன் மீண்டும்தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+