For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி விவகாரத்தில் புதிய சிக்கல்: வழக்குகள் தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்து வரும் அசோக் சிங்கல் உள்ளிட்ட வி.எச்.பி. தலைவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரியும், இன்னும் நீதிமன்றத் தீர்ப்பே வராத நிலையில் கோவில் கட்ட அயோத்தியில்குவிக்கப்பட்டுள்ள தூண்களைக் கைப்பற்றக் கோரியும் இரு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

அஸ்லம் புரே என்பவரும் முகம்மத் ஹாசிம் என்பவரும் தனித்தனியே இந்த மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.இந்த இரு மனுக்களையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இவற்றை அடுத்த வாரம் 13, 15ம் தேதிகளில் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அஸ்லம் புரே தனது மனுவில் கூறியுள்ளதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. ஆனால், அதற்குள் தூண்களைவி.எச்.பி. அயோத்தியில் குவித்துவிட்டது. அங்குள்ள கரசேவகர் புரத்தில் குவிக்கப்பட்டுள்ள தூண்களை கைப்பற்றவேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் தீர்ப்பு வரும் வரை யாரும் எந்த கட்டடமும் கட்ட அனுமதி தரக் கூடாது.

ராஜஸ்தானில் பின்ட்வாராவிலும் ஆயிரக்கணக்கான தூண்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் அரசுகைப்பற்ற உத்தரவிட வேண்டும். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைர் பாதுகாக்க ராணுவத்தை நிறுத்தவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதை 13ம் தேதி விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அசோக் சிங்கல் மீது அவமதிப்பு வழக்கு:

அதே போல முகம்மத் ஹாசிம் என்பவரும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வி.எச்.பி. தலைவர்கள் நீதிமன்றத்தை மதிப்பதே இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட முடியாது எனவெளிப்படையாகவே பேசி வருகின்றனர். எனவே, அசோக் சிங்கல் உள்ளிட்ட அதன் தலைவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங், மத்தியஉள்துறைச் செயலாளர் கமல் பாண்டே ஆகியோர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அத்வானி ஆகியோரும் வி.எச்.பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதை வரும் 15ம் தேதி விசாரிக்கப் போவதாக அறிவித்தனர்.

சோனியா கலங்கினார்:

இந் நிலையில் குஜராத்தில் எரிக்கப்பட்ட ரயிலைப் பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகலக்கமுற்றார்.

நிருபர்கள் அவரிடம் பேசியபோது, என்னை விட்டுவிடுங்கள். எனக்கு பேச்சே வரவில்லை என்று கூறிவிட்டுச்சென்றுவிட்டார்.

வாஜ்பாய்க்கு பா.ஜ.க. நெருக்குதல்:

இந் நிலையில் அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பிக்கு ஆதரவான நிலையைத் தான் அரசு எடுக்க வேண்டும் என பலபா.ஜ.க. எம்.பிக்களும் வாஜ்பாய்க்கு நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளனர்.

இல்லாவிட்டால் ஆட்சிக்கு வந்ததில் பயனே இல்லை என அவர்கள் வாஜ்பாயிடம் தெரிவித்துள்ளனர்.

வி.எச்.பியை ஆதரிக்கக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வாஜ்பாயை இன்னொருபுறம் நெருக்கி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X