சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் ரெடி
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 13 சட்டசபைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 14 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் சைதாப்பேட்டை தொகுதியில்வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மற்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் முழுமையாகத் தயாராகி விட்டது. அந்தப்பட்டியல்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு சென்னைபொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் தவறுகள், திருத்தங்கள் இருந்தால் வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டுள்ள படிவங்களில் நிரப்பித்தருமாறும் வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வருகிற 27ம் தேதி வரை இந்த வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டி வைக்கப்பட்டிருக்கும்.அதன் பின்னர் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications