குறையத் தொடங்கின ஸ்டாலினின் அதிகாரங்கள்
சென்னை:
சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் அதிகாரங்களைக் குறைக்கும் பணியில் தமிழக அரசு முழு மூச்சாக இறங்கிவிட்டது.
முதல் கட்டமாக நிர்வாக மற்றும் நிதி தொடர்பான சென்னை மேயரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
மேயர் பதவியா அல்லது எம்.எல்.ஏ. பதவியா என்பதை முடிவு செய்யும் காலம் விரைவில் வரும் என்றுசட்டசபையில் ஸ்டாலினுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு அடுத்த நாளே ஸ்டாலினின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாசட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1916ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் வருமாறு:
- அரசுக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்தில் தலையிட சென்னை மேயருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
- மாநகராட்சி கோப்புகளைப் பார்வையிடும் அதிகாரம் மேயரிடமிருந்து பறிக்கப்படுகிறது.
- தேவைப்பட்டால் மாநகராட்சி ஆணையரிடமிருந்து அறிக்கை மட்டுமே கேட்டுப் பெறலாம். கோப்புகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது.
- சென்னை நகர வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் வரை அனுமதிக்க முடியும் என்ற அதிகாரம் மேயரிடமிருந்து பறிக்கப்படுகிறது. இனிமேல் அந்த அதிகாரம் மாநகராட்சி ஆணையரிடமே இருக்கும்.
இந்த முக்கிய திருத்தங்களின் மூலம் ஸ்டாலினின் அதிகாரங்கள் முற்றிலும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.மாநகராட்சி ஆணையரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேயரை விட அதிக அதிகாரம் படைத்தவர்ஆணையர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர்களின் அதிகாரங்களும் இதேபோலவேமாற்றப்படவுள்ளன.
கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, திமுக அரசு சென்னை மேயரின் அதிகாரங்களைஅதிகரிக்கும் வகையில் பல்வேறு திருத்தங்களை அமல்படுத்தியது. அவை அனைத்தும் தற்போதைய திருத்தங்கள்மூலம்நீக்கப்படும்.
பழைய சட்டமே இனிமேல் அமலில் இருக்கும் என்று திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் சி. துரைராஜ் சட்டசபையில் தெரிவித்தார்.
மேயன் அதிகாரங்கள் பறிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டமசோதா வெகு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications