For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன, விஷம் சாப்டாச்சா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க கோட்டைக்கு வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஜெயலலிதாவைப் பார்க்கமுடியாததால் விஷம் குடித்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் அலுவலகம், தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் உள்ளது. அங்கு முதல்வரிடம் மனுகொடுப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் முதல்வரைப் பார்க்க முடிவதில்லை.

சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி இதுபோல முதல்வரைப் பார்க்க வந்தது. ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை.இதையடுத்து கையோடு எடுத்து வந்திருந்த விஷத்தை அந்த தம்பதி குடித்து விட்டது.

கோட்டை வளாகத்திலேயே சில மணி நேரம் அந்த தம்பதியினர் உயிருக்குப் போராடினர். அதன் பின்னர் அவர்கள் இருவரும்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் இறந்து விட்டனர்.

அந்த தம்பதியினரின் சாவுக்கு அனுதாபம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது மகளுக்கு அரசு வேலையும், இழப்பீடும்கொடுத்து உதவினார்.

கோவை தம்பதியின் சாவும், அவர்களுக்கு அரசு செய்த உதவியும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.கோட்டைக்கு வரும் பலரும், முதல்வரைப் பார்க்க தங்களை அனுமதிக்காவிட்டால் விஷம் குடித்து விடுவதாக காவலர்களைமிரட்டும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

சமீபத்தில் கூட ஒருவர் தான் விஷம் குடிக்கப் போவதாக மிரட்டினார். உடனடியாக போலீஸார் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நேற்று விஷம் குடித்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவிடம்மனு கொடுப்பதற்காக வந்த இவரால் முதல்வரைப் பார்க்க முடியவில்லை.

இதையடுத்து விஷம் குடித்துத் தற்கொலை செய்யப் போவதாக அவர் புலம்பிக் கொண்டே சென்றுள்ளார். பின்னர் தான் கையோடுகொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

கோவை தம்பதியினரின் சம்பவத்தில் போலீஸாரின் அக்கறையின்மைதான் அவர்கள் உயிழக்கக் காரணம் என்று கூறப்பட்டது.எனவே, நேற்று போலீசார் மிக வேகமாக செயல்பட்டு அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வரைப் பார்க்க வருபவர்கள் இப்படி விஷம் குடிக்க ஆரம்பித்திருப்பது கோட்டை போலீசாருக்கு பெரும் கவலையளிக்கஆரம்பித்துள்ளது.

கோட்டை வளாகத்தில் ஒரு கையில் மஞ்சள் பை, இன்னொரு கையில் கோரிக்கை மனுவோடு திரியும் மக்களில்யாராவது ஒருவர் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலே, என்ன விஷம் சாப்டாச்சா என்று கேட்கும் நிலைமைக்குவந்துவிட்டுவிட்டனர் போலீசார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X