கோடை நெரிசலைத் தவிர்க்க சிறப்பு பெங்களூர்-சென்னை ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோடைகால நெரிசலைத் தவிர்ப்பதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் மே 7ம் தேதி சிறப்பு ரயில்விடப்படுகிறது.
பெங்களூரிலிருந்து மே 7ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்குசென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இதைத் தவிர சென்னையிலிருந்து மைசூருக்கும் பாட்னாவுக்கும் கோடைகாலச் சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மே 8ம் தேதி இரவு 9 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில், மறுநாள்காலை 9.15 மணிக்கு மைசூரைச் சென்றடையும்.
அதே போல் மே 3ம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து கிளம்பும் சிறப்பு ரயில், ஹெளராவழியாகச் சென்று மே 6ம் தேதி மாலை 4.30 மணிக்கு பாட்னா சென்று சேரும்.
தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications