200 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் புதுப் படங்களின் 200 விசிடிக்கள் அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டன.
தமிழ்ப் புத்தாண்டுக்கு பல புதிய படங்கள் ரிலீஸ் ஆயின. இந்தப் படங்களின் திருட்டு விசிடிக்கள் அதிக அளவில்புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சென்னை முழுவதிலும் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
பரங்கிமலை, பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 200க்கும்மேற்பட்ட திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன. இதில் ஜெமினி, தமிழன், ராஜ்ஜியம் ஆகிய புதுப்படங்களின் திருட்டுவிசிடிக்கள்தான் அதிகம் இருந்தன.
இந்த திருட்டு விசிடிக்களை வைத்திருந்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications