தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்ப் படங்களுக்கு தமிழிலேயே பெயர்களை வைக்கக் கோரி சென்னையில் போராட்டம் நடந்தது.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைக் கண்டித்து "தமிழ் உரிமைக் கூட்டமைப்பு" என்றஅமைப்பின் சார்பில் சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தியாகு அனைவரையும் வரவேற்றார்.
ஆங்கிலப் படங்களுக்கு பகைவன் கோட்டை, தளபதி என அழகான தமிழில் பெயர் வைக்கும் நாம், சுத்தமானதமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை கூட்டத்தில் பேசியவர்கள் கண்டித்தார்கள்.












Click it and Unblock the Notifications