For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காகஇங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா இஸ்லாமாபாத் வந்து சேர்ந்தார். நாளை அவர்இந்தியாவுக்கும் வருகிறார்.

இன்று காலை பாகிஸ்தானுக்கு வந்துள்ள ஸ்டிரா, அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் மற்றும்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

கடந்த 14ம் தேதி ஜம்மூ அருகே உள்ள கலுச்சாக் ராணுவ முகாமைத் தீவிரவாதிகள் தாக்கியதில் ராணுவ வீரர்கள்மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்பட 38 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவரான அப்துல் கானி லோனும்தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் அடுத்து இந்திய-பாகிஸ்தான் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் நேரம் வந்து விட்டது என்று இந்தியாகூறிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் படிப்படியாக மூன்று ஏவுகணைகளை அவசர அவசரமாகச்சோதனை செய்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையே எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை அமெரிக்கா, இங்கிலாந்து போன்றமேற்கத்திய நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளன.

இதையடுத்து அந்நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வரஆரம்பித்துள்ளனர். போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இன்று இஸ்லாமாபத் வந்துள்ள ஸ்டிரா, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் வகையில்முஷாரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அப்துல் சத்தாருடனும் ஸ்டிரா இன்று பேசிய பிறகு நாளை இந்தியாவிற்கு வரவுள்ளார். பிரதமர் வாஜ்பாய்,வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரைச் சந்தித்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் அவர்ஈடுபடுவார்.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரான அனடோலி சபனோவ் நேற்றே பாகிஸ்தான் வந்து விட்டார்.இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முஷாரப்பிடம் அவர்கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க-சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு:

இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துணைஅமைச்சரான காலின் பாவெல்லை சீன வெளியுறவுத்துறை அமைச்சரான டாங் ஜியாச்சுன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாவெல்லுடன் தொலைபேசி மூலம் பேசும் போது, இந்தப் பதற்றம் தங்களை மிகவும் கவலை கொள்ளவைத்திருப்பதாக டாங் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி பேச்சுவார்த்தை நடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உலகநாடுகள் எடுக்க வேண்டும் என்றும் பாவெல்லிடம் டாங் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானுக்கு அனைத்து வகையான ராணுவ வசதிகளையும் அளித்துள்ள சீனா, கோரி உள்ளிட்ட பலஏவுகணைகளையும் தயாரித்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதத் துவக்கத்தில் பாவெல்லும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வருகை தரவுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X