For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 4 புதிய ரயில்கள் அறிமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தென்னக ரயில்வே விரைவில் 11 புதிய ரயில்களை இயக்கவுள்ளது. இதில் 4 ரயில்கள் தமிழகத்துக்குஒதுக்கப்பட்டுள்ளன.

தென்னக ரயில்வேயின் புதிய கால அட்டவணையை இன்று வெளியிட்ட அதன் பொது மேலாளர் ஆனந்த் பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்துதிருவனந்தபுரம் செல்லும் மெயில் ஆகியவை இனி "சூப்பர் பாஸ்ட்" எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுகின்றன.சுமார் 30 முதல் 55 நிமிடங்கள் வரை இவற்றின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரம்-ராமநாதபுரம் பேசஞ்ஜர் ரயில் இனி மதுரை வரை இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3 புதிய சதாப்தி ரயில்கள்:

மூன்று "ஜன சதாப்தி" எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

சென்னை (எழும்பூர்) - விஜயவாடாவுக்கு இடையே ஒரு ரயிலும், பெங்களூர்-ஹூப்ளிக்கு இடையே மற்றொருரயிலும் மற்றும் எர்ணாகுளம்-திருவனந்தபுரத்துக்கு இடையே மூன்றாவது ரயிலும் விடப்படும்.

ஆனால் இந்த ரயில்களை என்று முதல் இயக்குவது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

இவற்றைத் தவிர சென்னை (எழும்பூர்) - திருவனந்தபுரம், சென்னை (சென்ட்ரல்) - விசாகப்பட்டினம் (வாரம்ஒருமுறை), கன்னியாகுமரி - நிஜாமுதீன் (வாரம் ஒருமுறை), பெங்களூர் - காந்திதாம் (வாரம் ஒருமுறை),பெங்களூர் யஷ்வந்த்பூர் - துர்க் (வாரம் ஒருமுறை), பெங்களூர் யஷ்வந்த்பூர் - கண்ணனூர் (வாரம் ஒருமுறை)மற்றும் எர்ணாகுளம் - கோழிக்கோடு ஆகிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஹூப்ளி-ஹரிஹர் பாஸஞ்சர் ரயிலும்அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஆந்திராவில் உள்ள சத்யசாய் பாபாவின் பிரசாந்தி நிலையத்துக்கு நாளுக்கு நாள் வரும் பக்தர்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே வருவதை நாங்கள் நன்கு அறிவோம்.

இந்த பக்தர்களின் வசதிக்காக பெங்களூர்-நிஜாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ், பெங்களூர்-மும்பை சி.எஸ்.டி.உதயன் எக்ஸ்பிரஸ், பெங்களூர்-விசாகப்பட்டினம் பிரசாந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர் யஷ்வந்த்பூர்-குண்டூர்பாஸஞ்சர் ஆகிய ரயில்கள் இனிமேல் பிரசாந்தி நிலையம் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் என்று முதல் இந்த ரயில்கள் இவ்வாறு திருப்பி விடப்படவுள்ளன என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் என்றார் ஆனந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X