For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமா சான்ஸ் மோசடி: சுதாகரனின் ஆதரவாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை சுருட்டிய சினிமா தயாரிப்பாளரும், முதல்வர ஜெயலலிதாவினதோழி சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனின் மாஜி கூட்டாளியுமான சுயம்புலிங்கம் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனான அறிவிக்கப்பட்டு பின்னர் கழற்றிவிடப்பட்டசுதாகரன் திமுகஆட்சி காலத்தில் தனது பெயரில் நற்பணி மன்றங்களை நடத்தி வந்தார்.

ஊர்வலம் போவது, எம்.ஜி.ஆர். ஸ்டைல் கண்ணாடி என்று அசத்தி வந்தார். இவரிடம் இருந்த பணத்துக்காகஇவரை சின்ன எம்.ஜி.ஆர். என்றெல்லாம் அழைத்து நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கும்பல் சாப்பிட்டுவந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 44). இவர் சுதகரனோடு இருந்தபோது செந்தூரம் என்ற டப்பாபடத்தை தயாரித்தார். பிரகாஷ்ராஜ், தேவயானி நடித்த அந்தப் படம் பிளாப் ஆனது. இதனால் பெரும் பொருள்நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமல் முரளியை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால்,பணம் இல்லாமல் அதை முடிக்க முடியவில்லை.

இதையடுத்து சென்னையில் காய்கறி கடை வைக்கும் நிலைக்கு வந்தார். அம்பத்தூரில் இவரிடம் காய் வாங்க வந்தசெல்வகுமாருக்கு நடிக்க வேண்டும் என்று தீவிர ஆசை இருந்து வந்தது. பழைய பேப்பர் கடை நடத்தி வந்தச்ெலவகுமார் தனக்கு நடிக்க சான்ஸ் கேட்டு சுயம்புலிங்கத்திடம் கேட்டார்.

நானே இன்னொரு படம் எடுக்கப் போகிறேன். தயாரிப்புக்கு ரூ. 75,000 பற்றாக்குறையாக இருக்கிறது. அதைக்கொடுத்தால் படத்தில் சான்ஸ் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி செல்வகுமார் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் தந்தார். ஆனால், சுயம்பு படம் எடுக்கவில்லை.இதனால் தனது பணத்தை செல்வகுமார் திருப்பிக் கேட்டார்.

இதற்கு சுயம்பு, டேய் நான் யார் தெரியுமா, சுதாகரன் ஆளு என்று மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட போலீசாரிடம் செல்வகுமார் புகார் கொடுத்தார். சுதாகரனை அடக்கிஒடுக்கி வைத்திருக்கும் அரசு, இந்த வழக்கில் உடனடியாக சுயம்புலிங்கத்தைக் கைது செய்து சிறையில் தள்ளபோலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X