For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுக்கு என்ன அவசரம்?: கராத்தேவுக்கு நீதிமன்றம் சூடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பேற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்புவழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேயராக ஆசைப்பட்டால் தேர்தலில் நின்று வர வேண்டியதுதானே. அதை விடுத்து கோர்ட் உத்தரவை மீறி மேயர்பொறுப்பு என போட்டுக் கொள்வதா என்று நீதிமன்றம் கராத்தேவைக் கண்டித்துள்ளது.

சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி, தமிழக அரசின் சட்டத்தால் பறி போயுள்ளது. இந்த நிலையில்,ஸ்டாலின் பதவி பறிக்கப்படக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தச்சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்தது. இருப்பினும் மேயர் பதவி காலியாக வைக்கப்பட வேண்டும் என்றும் இறுதித்தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக பதவியேற்று மேயர் இருக்கையில்அமர்ந்து மேயருக்குரிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் மீதுஉதயக்குமார் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. அப்போது கராத்தே தியாகராஜனைக் கண்டித்துப் பேசினார்தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி. அவர் கூறுகையில்,

சென்னை நகர மேயர்தான் பதவி இழந்துள்ளாரே தவிர அவரது அலுவலகமும் பதவியும் பாதுகாக்கப்பட்டுள்ளது.மேயர் பதவியில் நீடிக்க ஸ்டாலினும் விருப்பம் இல்லாதவராகவே காணப்படுகிறார். இதனால் மேயருக்குரியபணிகளை துணை மேயர் செய்யலாம்.

இருப்பினும் தன்னை பொறுப்பு மேயர் என்று அவர் கூறிக் கொள்ள முடியாது. மேயருக்குரிய கார், அலுவலகம்,கொடி, அங்கி ஆகியவற்றை அவர் பயன்படுத்த முடியாது, கூடாது.

துணை மேயராக இருப்பவர் எப்படித் தன்னை பொறுப்பு மேயர் என்று கூறிக் கொள்ள முடியும்? அவருக்கு யார்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள்? மேயருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டியவர் தன்மைசெஷன்ஸ் நீதிபதி.

ஆனால் கராத்தே தியாகராஜனுக்கு அவர்தான் மேயராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தாரா? இல்லையே.

அடைப்புக்குறிக்குள் "பொறுப்பு மேயர்" என்று கூட துணை மேயர் போட்டுக் கொள்ளக் கூடாது. மேயராகஆசைப்பட்டால், தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேயராக இருக்கட்டும். அதை விட்டு விட்டு இப்படி குறுக்குவழியில் தன்னை மேயராக நினைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.அதற்குள் அவசரம் ஏன்? இது வரம்பு மீறிய செயலாகவே எங்களுக்குத் தோன்றுகிறது.

தலைமை நீதிபதி இல்லை என்றால் தற்காலிக தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்பதை, கராத்தே தியாகராஜன்விவகாரத்தில் ஒப்பிடக் கூடாது. சட்டத்தில் தற்காலிக தலைமை நீதிபதி என்ற ஒரு பதவியே உள்ளது. ஆனால்தற்காலிக மேயர் என்று சட்டத்தில் எங்காவது உள்ளதா? நீதிமன்றத்தை மதிக்க மாட்டீர்களா என்று ஆவேசமாககேட்டார் நீதிபதி சுபாஷன் ரெட்டி.

கராத்தேவின் இந்த கோர்ட் அவதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், கராத்தேவின்வழக்கறிஞர் ராமானுஜம் வாதாடுவதற்கு கூடுதல் நேரம் கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்றனர்.

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் டெல்லியில் உள்ளார். இதையடுத்து இந்தவழக்கில் வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியும், நீதிபதி முருகேசனும்அறிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X