For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி ராஜினாமா: குஜராத் அரசை கலைக்க பரிந்துரை

By Super
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவையும் இன்று ராஜினாமா செய்தது. தனது அரசைக் கலைக்கவும் அவர்ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அம் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மதக் கலவரம் காரணமாக பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அங்குஉடனடியாக தேர்தல் நடத்திவிட அக் கட்சி முடிவு செய்துள்ளது. மோடி அரசின் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று தனது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய மோடி அரசைக் கலைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினார்.பின்னர் அவரும் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை ஆளுநருக்கு அனுப்பினர்.

கோத்ராவில் அயோத்திக்குச் சென்ற ராம பக்தர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் சுமார் 60 பேர் இறந்தனர். இதையடுத்துஅம் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்தில் கிட்டத்தட்ட 1,500 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானசிறுபான்மையினர் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

மதக் கலவரத்துக்கு நரேந்திர மோடியே தலைமை வகித்ததாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டினர். கலவரத்தை அவர்வேண்டுமென்றே கட்டுப்படுத்தத் தவறியதாகவும், கலவரத்தை தூண்டியதாகவும் கூட குற்றச்சாட்டுக்கு உள்ளானார் மோடி.ஆனால், அவரை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் வாஜ்பாயும் துணைப் பிரதமர் அத்வானியும் பேசி வந்தனர்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்தக் கலவரங்களைக் கண்டித்துப் பேச ஆரம்பித்த பின்னர் தான் நெருக்குதல்காரணமாக மத்திய பா.ஜ.க. அரசு கலவரத்தை அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி.கேபிஎஸ் கில்லை அங்கு அணுப்பியது. அவர் குஜராத் போய் சேர்ந்த ஒரு வாரத்தில் கலவரத்தை அடக்கினார்.

மோடியை நீக்கக் கோரி பா.ஜ.க. தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதை பிரதமர் வாஜ்பாயும்,அத்வானியும் ஏற்க மறுத்தனர். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வான் விலகினார். மம்தாபானர்ஜி விலகினார். நாயுடும் போர்க் கொடி தூக்கினார். தமிழகத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து மோடிக்கு எதிர்ப்புகிளம்பியது.

ஆனால், மதசார்பற்ற திமுக, பாமக, மதிமுக போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இந்த விஷயத்தில் பா.ஜ.கவைதீவிரமாக ஆதரித்தன என்பது நினைவுகூறத்தக்கது.

கிட்டத்தட்ட 3 மாத காலம் அங்கு மக்கள் வீடுகளோடு சேர்த்து எரிக்கப்பட்டார்கள். நடுரோடுகளில் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். கற்பிணியின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுவும் தாயும் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் கூட நடந்தது. இருமதத்தினரும் வீடுகளையும் கடைகளையும் இழந்து உயிர்களுக்கு அஞ்சி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தக் கலவரங்கள் காரணமாக அம் மாநிலத்தில் மதரீதியிலான பிளவு உண்டாகியுள்ளது. இந்தப் பிளவு தங்களுக்கு மிகவும்உதவும் என மோடியும் பா.ஜ.கவும் கருதுகின்றனர். இந்த சாதகமான சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் வெற்றி உறுதி என்பதால்அவசரமாய் அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக் கோரியுள்ளார் மோடி.

ஆனால், தேர்தல் கமிஷன் உடனே தேர்தல் நடத்துமா என்பது சந்தேகம் தான். ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்துமுடிந்த 6 மாதத்துக்குள் அடுத்த சட்டமன்றக் கூட்டம் நடக்க வேண்டும்.

மோடி இதற்காகவே திட்டமிட்டு கடந்த ஏப்ரலில் சட்டமன்றத்தைக் கூட்டியதோடு சரி. அதன் பின்னர் சட்டமன்றத்தை அவர்கூட்டவில்லை. இப்போது அவர் சட்டசபையை கலைக்கக் கோரியுள்ளதால் அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டியநிலைக்கு தேர்தல் கமிஷனுக்கு நெருக்குதல் தந்துள்ளார்.

ஆனால், தேர்தல் கமிஷன் இதை ஏற்குமா என்பது சந்தேகம் தான் . அம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில்இருப்பதாக தேர்தல் கமிஷன் நினைத்தால் தான் தேர்தலை நடத்தும். அங்கு உடனே தேர்தல் நடத்த எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன.

இன்று தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகளை முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சந்தித்தார். குஜராத்தில் உடனே தேர்தல்நடத்தக் கூடாது என அவர் வலியுறுத்தினார். அங்கு லட்சக்கணக்கான சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்கப்பட்டுப்பாகக் கூறியுள்ள அவர், முதலில் அதை சரி செய்துவிட்டுத் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

குஜ்ரால் சந்தித்த சிறிது நேரத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் அருண் ஜேட்லியும் தேர்தல் கமிஷன் விரைந்தார். தேர்தலை உடனேநடத்துவது குறித்து அவர் பேசியதாகத் தெரிகிறது.

நிலைமையை ஆராய்ந்து தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X