ஜனாதிபதியாக 25ம் தேதி கலாம் பதவியேற்பு: 36 உறவினர்கள் டெல்லி விரைவு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இந்தியாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாமின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவருடைய அண்ணன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்உள்பட 36 பேர் இன்று பிற்பகல் ராமேஸ்வரத்திலிருந்து டெல்லி புறப்பட்டனர்.

வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு இந்தியாவின் 12வது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் கலாம். இதற்கானஏற்பாடுகள் டெல்லியில் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன.

கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர், கலாமின் நெருங்கிய நண்பரான பாக்ஷி வெங்கடசுப்பிரமணியசாஸ்திரிகள், ராமேஸ்வரம் முஸ்லீம் ஜமாத்தின் தலைவர் அப்துல் ஹமீது உள்பட அவருடைய உறவினர்களும்நண்பர்களுமாக 36 பேருக்கு பதவியேற்பு விழாவுக்கு வருவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை கிளம்பினர். நாளைகாலை சென்னை சென்று சேரும் அவர்கள் பின்னர் ஜி.டி. எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி கிளம்பிச் செல்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாத சுவாமி கோவிலில் கலாமுக்காக செய்யப்பட்ட சிறப்பு பூஜையின்பிரசாதங்களையும் அவர்கள் டெல்லிக்குக் கொண்டு செல்கின்றனர்.

இந்த 36 பேரின் ரயில் செலவு மற்றும் டெல்லியில் அவர்கள் தங்குவதற்கான முழுவதையும் கலாமே ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"கலாம் ரசிகர் மன்றம்"

இதற்கிடையே அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு உருவாக்கப்படுவதைப் போலவே சிவகங்கைமாவட்டத்தில் உள்ள லாடனேந்தலில் டாக்டர் கலாமுக்கு ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கப்பட்டு நீண்ட காலமாகச்செயல்பட்டு வருகிறது.

இந்த ரசிகர் மன்றத்தில் மொத்தம் 21 உறுப்பினர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணி என்ற விவசாயி தான் இந்த ரசிகர்மன்றத்தின் தலைவர்.

எந்த விதமான சுயலாபமும் இல்லாமல் இளைஞர்களுக்காகவே உழைப்பதால் தான் கலாமுக்கு ரசிகர் மன்றம்ஒன்றை அமைக்க நினைத்தோம். பின்னர் தொடங்கினோம் என்று நிருபர்களிடம் கூறினார் பாலசுப்பிரமணி.

ஏராளமான சமூக நலப் பணிகளை "கலாம் ரசிகர் மன்றம்" செய்து வருகிறது.

நாராயணனை சந்தித்தார் கலாம்

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நாராயணனை கலாம் நேரில் சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று நாராயணனைச் சந்தித்தார் கலாம். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுகூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+