For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மீது வாஜ்பாயிடம் புகார் செய்வேன்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் நெசவாளர்களும்,விவசாயிகளும், ஏழைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் புகார்கூறப் போவதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கூறினார்.

தமிழகத்தில் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் போர்க்காலஅடிப்படையில் வறட்சி நிவாரண உதவிகளை வழங்கக் கோரி டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பேரணிநடந்தது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மன்றோ சிலையிலிருந்து துவங்கிய இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில்மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக தலைவர் ஜி.கே. மணி, எம்.பிக்கள்பு.தா.இளங்கோவன், பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டமும் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசின் தவறான பல கொள்கைகளால் தான் அனைத்துத் தரப்பு மக்களும்தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பல்வேறு தரப்பினரும் தற்போது போராட்டங்களில்இறங்கியுள்ளனர்.

ஆனால் எதிர்க் கட்சியினர் தான் இந்தப் போராட்டங்களைத் தூண்டி வருகின்றனர் என்று கூறி அதிமுக அரசுதப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது. இதை மக்கள் நம்பி ஏமாந்து விட மாட்டார்கள்.

இலவச வேட்டி, சேலைத் திட்டம் ரத்தானதால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கும், குறுவைப் பயிரை பயிரிடமுடியாமல் வறுமையில் வாடிக் கொண்டுள்ள விவசாயிகளுக்கும் அரசு உடனடியாக நிவாரண உதவி வழங்கவேண்டும்.

போர்க்கால அடிப்படையிலும் தமிழக அரசு இவ்விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வறட்சியால் வாடும் ஏழைகளைக் காப்பது குறித்து எதிர்க் கட்சிகள் எவ்வளவோ அறிவுரைகளைக் கூறியும் தமிழகஅரசு அவற்றை உதறித் தள்ளி விட்டது. முறைப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் தவறிவிட்டது.

அடுத்த வாரம் நான் வாஜ்பாயைச் சந்தித்து தமிழகத்திற்குத் தேவையான நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறி வற்புறுத்துவேன். அப்போது அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் தமிழக மக்கள்படும் வேதனைகள் குறித்தும் அவரிடம் கூறுவேன் என்றார் ராமதாஸ்.

ரஜினி ரசிகர்களுக்கும், பாமகவினருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட மோதலையடுத்து சென்னையில் பொது இடத்தில்போராட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டதால், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X