ஊழல் செய்து பியூன் சேர்த்த ரூ.25 லட்சம்
தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூனுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புபோலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.25 லட்சம் மதிப்புக்கு அவர் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதுதெரிய வந்தது.
வணிக வரித்துறை அலுவலகத்தில் ஆண்டியப்பன் (58) என்பவர் பியூனாகப் பணிபுரிந்து வருகிறார். அடுத்தஆண்டு அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகப் புகார்கள்எழுந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் திலகவதி உத்தரவின் பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார்ஆண்டியப்பனின் வீட்டில் சோதனை நடத்தினர்.
ஆண்டியப்பனின் இரண்டாவது மனைவி தங்கியிருக்கும் செந்தில் நகர் வீட்டிலும், அவருடைய மகன் தமிழழகன்நடத்தி வரும் கம்ப்யூட்டர் மையத்திலும் ஒரே சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்தக்கம்ப்யூட்டர் மையத்தில் ஆண்டியப்பனும் ஒரு ஷேர் ஹோல்டராக உள்ளார்.
சோதனையின் போது தர்மபுரியில் ஆண்டியப்பன் கட்டியுள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீடுகள், நிலங்கள்,தங்க நகைகள் மற்றும் பல சொத்துக்கள் ஆகியவை குறித்த ஆவணங்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆண்டியப்பனின் மகளுடைய திருமணத்தின் போது அவருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டநகைகள், கார், பணம் ஆகியவை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
கடந்த 32 ஆண்டுகளாக வணிக வரித்துறையில் பணிபுரிந்து வரும் ஆண்டியப்பன், ரூ.50 மாதச் சம்பளத்தில் தான்பணியில் சேர்ந்தார். தற்போது சுமார் ரூ.4,500 மட்டுமே பெற்று வருகிறார்.
இந்தச் சம்பளத்தில் வாழ்ந்து வரும் ஆண்டியப்பன் எப்படி ரூ.25 லட்சத்திற்கு சொத்துக்களைக் குவித்தார் என்றுலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணையைமேற்கொண்டுள்ளனர்.
தர்மபுரி உள்ளிட்ட பல ஊர்களிலும் உள்ள வணிக வரித்துறை செக்போஸ்ட்டுகளில் லாரிகளை மடக்கி "வசூல்வேட்டை"யாடுவது ஆண்டியப்பனுடைய முக்கியமான "பணி"யாகும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது பல முக்கியமான வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும்நேரடியாகவே சென்று "தீபாவளி வசூல்" வேட்டை நடத்திய ஆண்டியப்பனை போலீசார் கையும் களவுமாகப்பிடித்துள்ளனர்.
ஆனால் பல உயர் அதிகாரிகளைத் தன்னுடைய "கைக்குள்" போட்டுக் கொண்டு தண்டனை பெறாமல் தப்பித்துவந்த ஆண்டியப்பன் இந்த முறை மிகவும் வசமாகச் சிக்கியுள்ளார். "வசூல்"களை நடத்தும் போது இந்தஅதிகாரிகளுக்கும் சேர்த்து தான் ஆண்டியப்பன் "வசூல்" நடத்துவது வழக்கமாம்.
அவரிடமிருந்து தாராளமாக "அன்பளிப்பு" பெற்ற அதிகாரிகளின் பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.விரைவில் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஆண்டியப்பனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் வயிற்றில் "புளி கரைய"ஆரம்பித்துள்ளது.
நேற்றைய சோதனையின் போது ஆண்டியப்பனின் வீடுகளிலும் கம்ப்யூட்டர் மையத்திலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போகும் நிலையில் ஆண்டியப்பன் வகையாக மாட்டியுள்ளார். இதனால் அவருடையவேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய பென்சன் மற்றும் பி.எப்.பணத்திலும் மண் விழுந்துள்ளது.
கடலூர் நகராட்சி ஊழியரும்...
இதற்கிடையே இதே போன்ற ஊழல் விவகாரத்தில் கடலூர் நகராட்சியைச் சேர்ந்த ஒரு ஊழியரும் சிக்கியுள்ளார்.
கடலூர் நகராட்சியில் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நடனன் என்ற ஊழியர்பொதுமக்களிடமிருந்து "எக்ஸ்ட்ரா வரி"களையும் செமையாகக் கறந்துள்ளார்.
இதையடுத்து நடனனின் சொத்தும் "குண்டக்க மண்டக்க" பெருகிவிட்டது. விஷயம் கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்புபோலீசார் இன்று காலை அவருடைய வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை தொடர்ந்து நடந்துவருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications