சி.டி. பிளேயரை திருடியவரை விரட்டிப் பிடித்த மதுரை மக்கள்
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த சி.டி. பிளேயர் அடங்கிய பையை திருடிக்காண்டு ஓடியவரை வில்லாபுரம் பகுதி வரை ஓட ஓட விரட்டி பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
மதுரை விளாங்குடி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ளஒரு கடையில் சி.டி. பிளேயர் வாங்கினார்.
பின்னர் அதை ஒரு பையில் போட்டு சைக்கிளின் முன் பகுதியில் தொங்க விட்டார். பிறகு ஒரு டீக்கடைக்கு சென்றுடீ சாப்பிட்டார்.
அப்போது அந்தப் பகுதி வழியே வந்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவன் திடீரென்று அந்தப்பையைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
அதைப் பார்த்த சக்திவேல் குரல் எழுப்பவே அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் பாண்டியைத் துரத்தினர்.
படு வேகமாக ஓடிய பாண்டி, கண்மாய் வழியாக வில்லாபுரத்திற்குள் நுழைந்தான். அந்தப் பகுதியில்இருந்தவர்களும் சேர்ந்து பாண்டியை அமுக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பாண்டி ஒப்படைக்கப்பட்டான்.
மேலூர் அருகே நகை பறிப்பு:
இதற்கிடையே மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை தாக்கி தங்கச் சங்கிலி, மோட்டார்சைக்கிளைப் பறித்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பியது.
மேலூரைச் சேர்ந்த ராஜன்-ஜெனி தாமஸ் தம்பதியர் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சிட்டம்பட்டி என்ற இடத்தில் வரும்போது, மூன்று பேர் கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர்இருவரையும் மிரட்டி கையில் இருந்த பொருட்களைத் தருமாறு கும்பல் கேட்டது.
அதற்கு ராஜன் மறுக்கவே கம்பியால் அவரைத் தாக்கிய கும்பல், ஜெனி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப்பறித்துக் கொண்டது. பின்னர் ராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்துதப்பியது.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications