இமாம் அலி, 4 பேரின் உடல்கள் மதுரையில் அடக்கம்
மதுரை:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி உள்ளிட்ட 5 பேரின் உடல்கள் இன்று மதுரையில் அடக்கம்செய்யப்பட்டன.
இதில் மங்கா பஷீரின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையத்தில் அடக்கம்செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இறுதியில் மதுரையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூர் சஞ்சய் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து தீவிரவாதிகளை தமிழகஅதிரடிப்படை போலீஸார் அதிரடியாக சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி, சீனியப்பா என்ற சபியுல்லா, அவருடைய மனைவி யாஸ்மின், முகம்மதுஇப்ராகிம் ஆகியோரது உடல்களை அவர்களது உறவினர்கள் பெங்களூர் சென்று போலீஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் இமாம் அலியின் உடலை அவனுடைய சகோதரி குர்ஷித் பேகம் தனியாக, தான் வந்த டாடா சுமோ வேன்மூலம் மதுரைக்குக் கொண்டு வந்தார்.
மற்றவர்களின் உடல்கள் ஒரு வேனில் எடுத்து வரப்பட்டன. மங்கா பஷீரின் உடல் மேலப்பாளையம் எடுத்துச்செல்லப்பட்டுவாத இருந்து மதுரைக்கே திருப்பிக் கொண்டு வரப்பட்டது.
இவர்களது உடல்கள் இன்று காலை மதுரை நெல்பேட்டை பகுதியில் சுங்கம் பள்ளிவாசலில் அடக்கம்செய்யப்பட்டன. இதையொட்டி இந்த பள்ளிவாசலில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளவந்த பலரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இந்த அடக்க நிகழ்ச்சியொட்டி மதுரை போலீஸார் நகர் முழுவதிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.நெல்பேட்டை பள்ளிவாசலில் ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இமாம் அலியின் சொந்த ஊரான மேலூருக்கு அவனுடைய உடலைக் கொண்டு சென்றால் பதற்றம்ஏற்படலாம் என்று கருதிய போலீசார், மதுரையிலேயே அவனுடைய உடலையும் அடக்கம் செய்யும் படிஅவனுடைய உறவினர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இமாம் அலியின் உடலும் மதுரையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications