கன மழைக்கு இதுவரை 18 பேர் பலி: முதல்வர் நிதியுதவி
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 18 பேர் வரைபலியாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து பலியான 4 பேரின் குடும்பத்தினருக்குமுதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வட கிழக்கு பருவ மழை தீவிரமாகியுள்ளது. சென்னையைத் தவிர பிற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் லேசான மழை பெய்து வருகிறது. கன மழைக்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 18 பேர்இறந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமரம்பாளையம் என்ற இடத்தில் பெய்த கன மழையில் குடிசை வீடு சரிந்துவிழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
முதல்வர் இரங்கல், நிதியுதவி:
மழைக்குப் பலியான நான்கு பேரின் குடும்பத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கவும் தல்வர்உத்தரவிட்டுள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இதற்கிடையே, தமிழகம் முழுவதிலும் பெய்து வரும் கன மழையினால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு காணப்படுகிறது. தேனி, தர்மபுரி, கோயம்புத்தூர்,திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது.
ஒசூரில் பெய்த கன மழையினால் அங்குள்ள தொழிற்பேட்டையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டநிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து விட்டது.
சரியான கால்வாய் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் புகார்கூறியுள்ளனர்.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


