மதுரையில் சுவர் இடிந்து 7 வயது சிறுமி பலி
மதுரை:
மதுரையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு 7 வயது சிறுமிபலியானாள். அவளுடைய சகோதரன் பலத்த காயமடைந்தான்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.
பல இடங்களில் இடி, மின்னல் தாக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் சுமார் 20பேர் வரை உயிரிழந்தனர்.
இந்நிலையில் மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் பலத்த மழைகாரணமாக இன்று அதிகாலை ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் அந்த வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தாள்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய சகோதரன் பலத்த காயமடைந்தான். அவன் தற்போது சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இதற்கிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதுரை நகரின் பல தாழ்வான பகுதிகளும் நீரில் மிதந்துகொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் இன்னும் வைகை அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படவில்லை.
வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விநாடிக்கு 1,164 கன அடி நீர் அணைக்குள் வந்துகொண்டிருந்தாலும், விநாடிக்கு 30 கன அடி நீர் தான் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தற்போது அணையில் 47.9அடி நீர் உள்ளது.
அதேபோல் பெரியாறு அணையிலும் 117.3 அடி நீர் உள்ளது. விநாடிக்கு 773 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 775 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


