For Quick Alerts
For Daily Alerts
Just In
குடிநீரில் நெளிந்த புழுக்கள்: சென்னையில் மக்கள் மறியல்
சென்னை:
குடிநீரில் புழுக்கள் இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிநீர்க் குழாய்களில் புழுக்கள் வருவதாக அப்பகுதிமக்கள் புகார் கூறினர்.
ஆனால் குடிநீர் வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதிதிமுக செயலாளரும் பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மறியலில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து சமாதானம் பேசி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


