சென்னையில் நகைகளைத் திருடிய நேபாளப் பெண்கள்
சென்னை:
நகை வாங்க வந்தது போல நடித்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற நேபாளப் பெண்கள் 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு இந்த நேபாளப் பெண்கள் சென்றுள்ளனர். அங்கு நகைவாங்குவது போல நடித்தனர். அப்போது கடை ஊழியர்களுக்குத் தெரியாமல் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கக்காசுகள், நகைகளை திருடிக் கொண்டனர்.
பின்னர் வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து சேப்பாக்கம் சென்றனர். அங்கு கிரிக்கெட் ஸ்டேடியம்அருகே வந்ததும் இறங்கிக் கொண்டனர்.
பதற்றத்துடன் இருந்த அவர்கள் இறங்கும்போது நகைகள், தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைஆட்டோவிலேயே போட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.
அந்த பெட்டியைப் பார்த்த ஆட்டோ டிரைவர் அதிலிருந்து விலாசத்தைப் பார்த்து அதை நகைக் கடைக்குக்கொண்டு வந்தார். அப்போதுதான் திருட்டுப் போன கடைக்காரர்களுக்குத் தெரியவந்தது.
அவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நேபாளப் பெண்கள் தப்பிச் சென்று விடாதபடி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில்போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். மேலும் நேபாள மக்கள் அதிகம் தங்கியிருக்கும் எழும்பூர்,பூக்கடை, தி.நிகர் ஆகிய பகுதிகளிலும் போலீஸார் தீவிரமாக தேடினர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் வைத்து இவர்கள் பிடிபட்டனர். போலீஸாரைப் பார்த்து,நாங்கள் பெரிய இடத்து பெண்கள், எங்களிடம் சோதனை போடக் கூடாது என்று கத்தினர்.
ஆனால் போலீஸார் அவர்களை ஒதுக்கித்தள்ளி விட்டு அறையை சோதனையிட்டபோது, குளியலறையில்வைத்தும் பெருமளவில் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை வேறு கடைகளில் இவர்கள் திருடியுள்ளனர்.
நகைக் கடையில் உள்ள வீடியோ கேமராவிலும் இவர்கள் பதிவாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
-->


