தமிழகத்தில் 2 விபத்துகளில் 7 பேர் சாவு
விழுப்புரம் & தேனி:
தமிழகத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 7 பேர் பலியாயினர்.
விழுப்புரம் அருகே நடந்த விபத்தில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் பலியாயினர்.அதே போல தேனியில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருக்கோரையூர் என்ற இடத்தில் உள்ள புவியியல் ஆய்வு அலுவலகம் ள்ளது. இதில்பணிபுரியும் பாஸ்கரன், பாலமுருகன், ஆர்.பி.சிங், கோபால் சிங் உள்ளிட்டோர் ஒரு வேனில் புதுவைக்குசென்றனர். வேனை சிங்காரவேலு என்பவர் ஓட்டிச் சென்றார்.
விழுப்புரம் அருகே வளவனூர் என்ற இடத்தில் வேன் சென்றபோது, சாலையோரம் இருந்த புளிய மரத்தில் படுவேகமாக மோதியது. இதில் அனைவரும் காயமடைந்தனர். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குஅவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
கே.பி.சிங் வழியில் இறந்தார். கோபால் சிங் மற்றும் பாஸ்கரன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில்இறந்தனர்.
ஜீப்-பஸ் மோதலில் 4 பேர் சாவு:
அதே போல தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ஜீப்பும், அரசு பஸ்சும் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.
மூனாறு நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப், பழனிசெட்டிப்பட்டி அருகே வந்தபோது, எதிரில் வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பில்பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாயினர்.
பஸ் பயணிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-->


