செஞ்சி அருகே கள்ளச் சாராயம் குடித்து ஒருவர் பலி
செஞ்சி:
செஞ்சி அருகே கள்ளச் சாராயத்தைக் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 12 பேர் வாந்தி,மயக்கத்துடன் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூர் மற்றும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தசிலர் விழுப்புரம் மாவட்டம் ஆனாத்தூரில் கள்ளச் சாராயம் குடித்ததில் ஒருவருடைய பார்வை பறிபோனது.மேலும் 25 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி கிராமத்தில் நேற்றிரவு கள்ளச் சாராயம்குடித்த ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டே சுருண்டு விழுந்து இறந்தார்.
இங்கு சாராயம் குடித்த மேலும் 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும்செஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் உயிருக்குப் போராடிய மூன்று பேர் உடனடியாக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்தவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் தான் பண்ருட்டியில் கள்ளச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள்உயிரிழந்தனர். சுமார் 100 பேருக்கு பார்வை மங்கியது.
எத்தனை பேர் இறந்தாலும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் எப்போதும் போலவே கள்ளச் சாராய வியாபாரம்கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
"குடிமக்களும்" இதைக் கள்ளச் சாராயம் என்றே நினைக்காமல் குடித்து, செத்து விழுகிறார்கள்.
-->


