For Daily Alerts
Just In
திருநாவுக்கரசர் பரிந்துரையால் 3 பேருக்கு பிரதமர் உதவி
சென்னை:
மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பிரதமர்வாஜ்பாய் மருத்துவ நிதியுதவி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பிளவிடுத்தி என்ற இடத்தைச் சேர்ந்த செல்வராஜ், தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம்கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கரீம் ஆகியோருக்கு தலா ரூ. 30,000 நிதியுதவியும், புதுக்கோட்டையைச் சேர்ந்தபாண்டிமணிக்கு ரூ. 20,000 நிதியுதவியும் அளித்துள்ளார் பிரதமர்.
-->


