மனைவியுடன் கோபம்: மதுரைக்கு "தப்பிச் சென்ற" சென்னை தாசில்தார்
சென்னை:
காணாமல் போய் விட்டதாகக் கூறப்பட்ட சென்னை தாசில்தார், மனைவியுடன் கோபித்துக் கொண்டு மதுரைக்குப்போய் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக இருப்பவர் தரணிபதி. சமீபத்தில் பணி நேரம் முடிந்தபிறகும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் பயந்து போயினர். இதையடுத்து தரணிபதியின் மகன் போலீஸில் புகார்கொடுத்தார்.
போலீஸாரும், கலெக்டர் அலுவலக ஊழியர்களும் தரணிபதியைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். ஆனால் எங்குதேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
போலீஸார் சோர்ந்து போயிருந்த வேளையில், மறுநாள் இரவே வீடு வந்து சேர்ந்தார் தரணிபதி. இன்ப அதிர்ச்சிஒருபக்கம், எங்கு போயிருந்தார் என்ற எரிச்சல் மறுபக்கமுமாக சேர்ந்து, தரணிபதியிடம் எங்கு சென்றிருந்தீர்கள்என்று போலீசார் கேட்டனர்.
சம்பவத்தன்று காலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனவருத்தமடைந்திருந்த தரணிபதி, அன்றுஇரவு மதுரைக்குச் சென்று, மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டுஅடுத்த பஸ்சைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்துள்ளார் என்று அப்போது தெரிய வந்தது.
இதன் பின்னர் தான் விசாரணை நடத்தி வந்த போலீஸார் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-->


